பொது செய்தி

தமிழ்நாடு

1-8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: செப்.,8க்கு பின் முடிவு

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை: ‛‛தமிழகத்தில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து செப்.,8 ம் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்,'' என, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.திருச்சியில் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட 13 ஆசிரியர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, விருது
பள்ளிகள், மகேஷ் பொய்யாமொழி, கோவிட், கொரோனா, மாணவர்கள்,

சென்னை: ‛‛தமிழகத்தில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து செப்.,8 ம் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்,'' என, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

திருச்சியில் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட 13 ஆசிரியர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, விருது வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 9 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் நடந்து வருகிறது. முதல் 8 நாட்கள் வகுப்புகள் எப்படி செல்கிறது?. வருகை பதிவேடு எப்படி இருக்கிறது?, மாணவர்களின் பாதுகாப்பு போன்றவை குறித்து கண்காணிக்க திட்டமிட்டு, அதை கண்காணித்து வருகிறோம். மாணவர்கள், பெற்றோர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. மாணவர்களை கட்டாயமாக பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என நாங்கள் கூறவில்லை. எனினும், பெற்றோர்கள் அக்கறையுடன் மாணவர்களை அனுப்ப வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எங்களின் கடமை.


latest tamil news



துவக்கப் பள்ளி என்பது முக்கியமானது. கோவிட் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த சூழலில் அவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து என்ன முடிவெடுக்கலாம்? என்பதை செப்.,8 ம் தேதிக்கு பிறகு முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu - tiruchi,இந்தியா
06-செப்-202101:07:15 IST Report Abuse
babu என்ன அவசரம் தொற்று தொற்று பெருந்தொற்று. சிறிதே னும் படித்தாலும் அனைத்தும் பாஸ் தேர்ச்சி. 9 10 11 12 படிக்கட்டும். 8 வது அடுத்த வருடம் 9 படிச்சிடலாம். 1-7 வீட்டிலேயே புரிஞ்சத படிக்கட்டும். பள்ளிகள் எதற்கு. இனி? fees கட்டனும் பள்ளி திறப்பு? அனைத்துமே திறந்த வழி பள்ளிகள் சிறந்த வழி முறை. அடுத்து தீபாவளி கிரித்துமஸ் நியு இயர்... தொற்று ம்முற்றும்
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
05-செப்-202120:02:32 IST Report Abuse
தமிழ் மைந்தன் தனியார் பள்ளி முதலாளிகளிடம் வாங்கிய காசுக்கு திறந்துதானே ஆகவேண்டும்......
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
05-செப்-202119:50:50 IST Report Abuse
Pugazh V You walk stalin, talk stalin, sleep stalin, live stalin and breath stalin. That's why, யாரைப் பார்த்தாலும் உங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மாதிரியே தெரிகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X