பஞ்சு மீதான நுழைவுவரி ரத்து ஏற்றுமதியாளர்கள் பாராட்டு

Added : செப் 05, 2021
Share
Advertisement
திருப்பூர் : பஞ்சுக்கான ஒரு சதவீத நுழைவு வரியை தமிழக அரசு ரத்து செய்துள்ளதை, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏ.இ.பி.சி.,) வரவேற்றுள்ளது.தமிழக முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் நேற்று, 110 விதியின் கீழ், பஞ்சு மற்றும் கழிவுப்பஞ்சு மீதான ஒரு சதவீத நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இது, நுாற்பாலை மற்றும் ஆடை உற்பத்தி துறை யினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.ஆயத்த ஆடை
 பஞ்சு மீதான நுழைவுவரி ரத்து ஏற்றுமதியாளர்கள் பாராட்டு



திருப்பூர் : பஞ்சுக்கான ஒரு சதவீத நுழைவு வரியை தமிழக அரசு ரத்து செய்துள்ளதை, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம் (ஏ.இ.பி.சி.,) வரவேற்றுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் நேற்று, 110 விதியின் கீழ், பஞ்சு மற்றும் கழிவுப்பஞ்சு மீதான ஒரு சதவீத நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இது, நுாற்பாலை மற்றும் ஆடை உற்பத்தி துறை யினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக (ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல் கூறியதாவது:

வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் பஞ்சுக்கான நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என, ஏ.இ.பி.சி., சார்பில், தமிழக அரசுக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பப்பட்டது. நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பஞ்சுக்கான ஒரு சதவீத வரியை ரத்து செய்து சட்டசபையில் முதல்வர் அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது.கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள், ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், பஞ்சு மறு சுழற்சி செய்வோர் பயன்பெறுவர். நுால் விலை குறைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X