பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

Added : செப் 05, 2021
Share
Advertisement
வேலுார்: மாணவர்கள் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி வரும் ஆசிரியர் சக்திவேலு நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.நல்லாசிரியர் விருது பெற்ற சக்திவேல் வேலுார் மாவட்டம், ஜமால்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.எம்.ஏ., பி.எட்., படித்துள்ள இவர் கல்வி கற்க்கும் மாணவர்களே நான் வணங்கும் தெய்வங்கள் என்று கூறி மாணவர்களை
மாணவர்கள் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் ஆசிரியருக்கு  நல்லாசிரியர் விருது

வேலுார்: மாணவர்கள் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி வரும் ஆசிரியர் சக்திவேலு நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

நல்லாசிரியர் விருது பெற்ற சக்திவேல் வேலுார் மாவட்டம், ஜமால்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.எம்.ஏ., பி.எட்., படித்துள்ள இவர் கல்வி கற்க்கும் மாணவர்களே நான் வணங்கும் தெய்வங்கள் என்று கூறி மாணவர்களை கையெடுத்து வணங்கிய பிறேகே வகுப்பு தொடங்குகிறார்.தினமும் மாலை விளையாட்டு, யோகா, பாட்டு, நடனம் மூலம் மாணவர்களின் அறிவை வளர்க்கிறார். இதற்காக அடிக்கடி நாடகம், விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.

கொரோனா விதிமுறைகள்படி மாணவர்களை வயல் வெளிக்கு அழைத்து சென்று விவசாயம் குறித்து பேசி வருகிறார். விடுமுறை நாட்களில் பைக்கில் வீடு, வீடாகச் சென்று மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். பெற்றோர் கொரோனா தடுப்பூசி கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பொது அறிவு, பேச்சுத் திறனில் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளித்து வருகிறார்.

பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையின் போது பேண்டு, வாத்தியங்கள் முழக்க அழைத்து வருவது சிறப்பாகும். கற்றல், கற்பித்தல் முயையை 100 சதவீதம் செயல்படுத்தி வருகிறார். இணைய வழி கல்வியை நடத்தி மாணவர்கள் அனைவரையும் அதில் ஈடுபடச் செய்ததால் நல்லாசிரியர் விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.கம்பளிப்பூசிகளாக வரும் மாணவர்களை பட்டாம் பூச்சியாக மாற்றுவதே என் இலக்கு என்று அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X