பொது செய்தி

தமிழ்நாடு

தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு: தலைமை ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது

Added : செப் 05, 2021
Share
Advertisement
வேலுார் : நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தலைமை ஆசிரியை பிரிஜெட், பதிய முறை கையாண்டு பாடங்கள் நடத்தியதால் மாணவர்கள் வருகையும், தேர்ச்சி சதவீதமும் அதிகரித்தது.நல்லாசிரியர் விருது பெற்ற பிரிஜெட் வேலுார் மாவட்டம், வேலுார் கஸ்பா நகராட்சி தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். எம்.ஏ., பி.எட்., மற்றும் எம்பில் படித்துள்ள இவர் கல்வித்துறையில்
தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு: தலைமை ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருது


வேலுார் : நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட தலைமை ஆசிரியை பிரிஜெட், பதிய முறை கையாண்டு பாடங்கள் நடத்தியதால் மாணவர்கள் வருகையும், தேர்ச்சி சதவீதமும் அதிகரித்தது.

நல்லாசிரியர் விருது பெற்ற பிரிஜெட் வேலுார் மாவட்டம், வேலுார் கஸ்பா நகராட்சி தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். எம்.ஏ., பி.எட்., மற்றும் எம்பில் படித்துள்ள இவர் கல்வித்துறையில் 21 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

பல ஆண்டுகளாக 35 மாணவர்கள் மட்டும் படித்து வந்த இந்த பள்ளியில் 165 ஆக உயர்த்தி காட்டினார். கணினி வழி கல்வி, யோகா, தியானம், விளையாட்டு முறை கல்வியில் புதிய அணுகுமுறை கையாண்டதால் மாணவர்கள் வருகையும், தேர்ச்சி சதவீதமும் அதிகரித்தது.

கொரோனா ஊரடங்கின் போது தமிழக அரசின் கல்வி டிவிக்கு பிளஸ் 2 வகுப்பிற்கு அறிவியல் பாடங்கள் தொடர்ந்து நடத்தியதால் நல்லாசிரியர் விருதுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இந்த பள்ளியில் தரமான கல்வியை அளித்து மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவதே எனது இலக்கு என்று அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X