பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா காலத்தில் 2 ஆண்டுகள் ஆன் லைனில் பாடம் நடத்திய ஆசிரியருக்கு விருது

Added : செப் 05, 2021
Share
Advertisement
வேலுார் : நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர் கார்த்தி, கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகள் ஆன் லைனில் பாடம் நடத்தி அசத்தியுள்ளார்.நல்லாசிரியர் விருது பெற்ற கார்த்தி வேலுார் மாவட்டம், செதுக்கரை பொன்னம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.பி.எஸ்.சி., எம்.ஏ., பி.எட்., மற்றும் எம்பில் படித்துள்ள இவர்
கொரோனா காலத்தில் 2 ஆண்டுகள் ஆன் லைனில் பாடம் நடத்திய ஆசிரியருக்கு விருது


வேலுார் : நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர் கார்த்தி, கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகள் ஆன் லைனில் பாடம் நடத்தி அசத்தியுள்ளார்.

நல்லாசிரியர் விருது பெற்ற கார்த்தி வேலுார் மாவட்டம், செதுக்கரை பொன்னம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.பி.எஸ்.சி., எம்.ஏ., பி.எட்., மற்றும் எம்பில் படித்துள்ள இவர் கல்வித்துறையில் 15 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். கொரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகள் பள்ளி மாணவர்களுக்கு ஆன் லைனில் தினமும் பாடங்கள் நடத்தினார். பள்ளி வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறார். சி.பி.எஸ்.சி., கல்விக்கு இணையாக பாடம் நடத்தினார்.

யோகா, நாட்புப்புற கலைகள், ஓவியம் மூலம் மாணவர்களின் திறன் வளர்த்தார். செயல் வழிக் கல்விக்கு முக்கியம் அளித்தார். எதிர் கால திட்டம் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதால் நல்லாசிரியர் விருதுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X