துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை முயற்சி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை முயற்சி

Added : செப் 05, 2021
Share
சென்னை : திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கத்தில், ஆக., 13ம் தேதி முதல் சட்டசபை கூட்டம் நடக்கிறது. இங்குசுழற்சி முறையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சட்டசபை நடக்கும் கலைவாணர் அரங்கம் அருகே உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்


சென்னை : திருவல்லிக்கேணி கலைவாணர் அரங்கத்தில், ஆக., 13ம் தேதி முதல் சட்டசபை கூட்டம் நடக்கிறது. இங்குசுழற்சி முறையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சட்டசபை நடக்கும் கலைவாணர் அரங்கம் அருகே உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் வேலுச்சாமி, 27, தன்னை தானே, துப்பாக்கியால் தாடைக்கு சுட்டு தற்கொலைக்கு முயன்றார்.சக போலீசார் மீட்டு, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X