பொது செய்தி

தமிழ்நாடு

13 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது: ஈரோட்டில் இன்று வழங்கல்

Added : செப் 05, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 13 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதுக்கு மொத்தம், 47 ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 13 ஆசிரியர்கள் தேர்வு குழு கமிட்டியால் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு பள்ளி கல்வி துறை இயக்ககம் ஒப்புதல் அளித்து பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக விருது வழங்கும் விழா, அந்தந்த

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 13 ஆசிரியர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதுக்கு மொத்தம், 47 ஆசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இதில், 13 ஆசிரியர்கள் தேர்வு குழு கமிட்டியால் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு பள்ளி கல்வி துறை இயக்ககம் ஒப்புதல் அளித்து பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக விருது வழங்கும் விழா, அந்தந்த மாவட்டங்களிலேயே நடத்தி கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு கலெக்டர் அலுவலக, இரண்டாம் தளத்தில் கலெக்டர் கிருஷ்ணனுன்ணி தலைமையில் விழா இன்று காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. விருது பெறுபவர், அவருடன் மற்றொருவர் மட்டும் வர அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை செய்துள்ளது. பெருந்துறையில் உள்ள ஈரோடு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த விரிவுரையாளர்கள் இருவர் இவ்விருதினை இன்று பெறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X