சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி கொலையில் வாலிபர் அதிரடி கைது

Added : செப் 05, 2021
Share
Advertisement
கொடுமுடி: கொடுமுடி, விவசாயி கொலையில் வாலிபர் கைதானார். கொடுமுடி, நாகமநாயக்கன்பாளையம் ரவி தோட்டத்தில் கடந்த, 2ல் அதே பகுதியை சேர்ந்த விவசாயி கோபாலன், 66, மர்மமான முறையில் முகத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். 'சிசிடிவி' காட்சிகள், மொபைல் போன் தொடர்புகள், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்தது திண்டுக்கல் மாவட்டம்,

கொடுமுடி: கொடுமுடி, விவசாயி கொலையில் வாலிபர் கைதானார். கொடுமுடி, நாகமநாயக்கன்பாளையம் ரவி தோட்டத்தில் கடந்த, 2ல் அதே பகுதியை சேர்ந்த விவசாயி கோபாலன், 66, மர்மமான முறையில் முகத்தில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். 'சிசிடிவி' காட்சிகள், மொபைல் போன் தொடர்புகள், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்தது திண்டுக்கல் மாவட்டம், வெம்பாறை பட்டு சேடிபட்டியை சேர்ந்த சதீஷ்குமார், 22 என தெரியவந்தது. விசாரணையில், கரூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து செல்லும் போது கோபாலனுக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த, 1ல் இரவு கோபாலன், மொபைல் போனில் சதீஷ்குமாரை தொடர்பு கொண்டு தன் தோட்டத்துக்கு வரவழைத்தார். தவறாக நடக்க கோபாலன் முயற்சித்ததால், கோபமடைந்த சதீஷ்குமார், பீர் பாட்டிலால் தாக்கி தப்பியோடியது உறுதியானது. சதீஷ்குமாரை கொடுமுடி போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X