சேலம்: இந்திய அரசு மத்திய பனை பொருட்கள் நிறுவனம் சார்பில், சேலம், நான்கு ரோடு, சாமுண்டி வளாகத்தில், வரும், 22 முதல், அக்., 1 வரை, தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி நடக்க உள்ளது. அதில், தங்கம் விலை கணக்கிடும் முறை, கொள்முதல் செய்யும் முறை, உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை, 'ஹால்மார்க்' தரம் அறியும் விதம் குறித்து பயிற்சி அளிக்கப்படும். 18 வயது நிரம்பிய இருபாலரும் பங்கேற்கலாம். கல்வித்தகுதி குறைந்தது, 8ம் வகுப்பு. பயிற்சி முடிவில், இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும். இதில் பங்கேற்போர், தேசிய, கூட்டுறவு, தனியார் வங்கிகள், நகை அடகு நிதிநிறுவனங்கள், நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம். சுயமாக நகை கடை, வியாபார நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளர், விற்பனையாளராக பணியில் சேரலாம். விரும்புவோர், இரு புகைப்படம், முகவரி, கல்வி உள்ளிட்ட சான்றிதழ்களுடன், பயிற்சி கட்டணம், 5,300 ரூபாய், 18 சதவீத ஜி.எஸ்.டி., 6,254 ரூபாய் செலுத்த வேண்டும். விபரம் பெற, 94437 28438 என்ற எண்ணில் அழைக்கலாம்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement