தமிழ்நாடு

வீடுகளில் புகுந்த மழைநீரால் மக்கள் அவதி; ஏற்காட்டில் 127.6 மி.மீ., பதிவு

Added : செப் 05, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் வீடுகளில் புகுந்த மழைநீரால், மக்கள் அவதிப்பட்டனர். ஏற்காட்டில் அதிகபட்சமாக, 127.6 மி.மீ., மழை பதிவானது.தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், அடிக்கடி பரவலாக மழை பெய்கிறது. சேலத்தில் இரண்டாம் நாளாக நேற்று முன்தினம் இரவில் கனமழை, ஆங்காங்கே விட்டுவிட்டு பெய்தது. சில இடங்களில் இடியுடன் மிதமழை காணப்பட்டது. நேற்று காலை, 8:00 மணி

சேலம்: சேலம் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் வீடுகளில் புகுந்த மழைநீரால், மக்கள் அவதிப்பட்டனர். ஏற்காட்டில் அதிகபட்சமாக, 127.6 மி.மீ., மழை பதிவானது.


தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், அடிக்கடி பரவலாக மழை பெய்கிறது. சேலத்தில் இரண்டாம் நாளாக நேற்று முன்தினம் இரவில் கனமழை, ஆங்காங்கே விட்டுவிட்டு பெய்தது. சில இடங்களில் இடியுடன் மிதமழை காணப்பட்டது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக ஏற்காட்டில், 127.6 மி.மீ., மழை பதிவானது. அதேபோல், சங்ககிரி, 17, மேட்டூர், 15.8, சேலம், 13.2, ஆத்தூர், 11.4, காடையாம்பட்டி, 6, கெங்கவல்லி, கரியகோவில், தம்மம்பட்டி தலா, 5, ஆணைமடுவு, ஓமலூர், வாழப்பாடி தலா, 4, இடைப்பாடி, 3, பெத்தநாயக்கன்பாளையம், 2 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. ஏற்காட்டில் பெய்த அதிக மழையால், ஆங்காங்கே திடீர் அருவிகள் உருவாகியுள்ளது. சுற்றுலா பயணியர், அருவிகளில் குளியல் போட்டு மகிழ்ந்தனர். வழிந்தோடி வரும் நீர், ஏற்காடு அடிவாரத்தில் உள்ள நிலங்களில் தேங்கி, வெள்ளக்காடாக மாற்றிவிட்டது. அங்குள்ள, கற்பகம் கிராமம் தடுப்பணையில் வெள்ளம் ஏற்பட்டு, கோவில்காடு பகுதியில், விவசாயி சுந்தரத்துக்கு சொந்தமான, 2 ஏக்கர் பாக்கு மரக்கன்றுகள் சாய்ந்து நாசமாகி விட்டன. கன்னங்குறிச்சி புது ஏரி நிரம்பி செம்மண் நிறத்தில் காட்சியளித்தது. சேலம், தம்மண்ணன் செட்டி தெருவில், மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து தடைபட்டது. அயோத்தியாப்பட்டணம் அடுத்த டி.பெருமாபாளையத்தில், கல்லாறு, திருமணிமுத்தாறு, ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அப்பகுதியில் உள்ள காரைக்காடு ஏரி, 5 ஆண்டுக்கு பின் நிரம்பியது. அதில் இருந்து வெளியேறிய நீர், டி.பெருமாபாளையம் பகுதியிலுள்ள வீதிகளில் பெருக்கெடுத்து ஓடத்தொடங்கியது. வீடுகளை சூழ்ந்ததோடு, வீட்டுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் நள்ளிரவில் மக்கள் அவதிக்கு ஆளாகினர். அப்பகுதியை சேர்ந்த குமாருக்கு சொந்தமான இரு பசு மாடுகள், அவர் பண்ணையில் இருந்த, 100க்கும் மேற்பட்ட கோழிகள் மழைநீரில் அடித்துச்செல்லப்பட்டன. அப்பகுதியில் இருந்த பூந்தோட்டம், வெங்காயம், சோளம் உள்ளிட்ட பயிர்கள் நாசமாகின. வாழை, தென்னை உள்ளிட்ட மரங்கள் அடித்துச்செல்லப்பட்டன. ஊராட்சி உதவி இயக்குனர் மணிவாசகம், ஆர்.ஐ., அருள்மொழி உள்ளிட்ட அதிகாரிகள், சேதம் குறித்து பார்வையிட்டு, சீரமைப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதேபோல் தாசநாயக்கன்பட்டியிலும், மழைநீர் வீடுகளில் புகுந்து, மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

மூழ்கிய பாலங்கள்: உத்தமசோழபுரம் - பூலாவரி இடையே ஆத்துக்காட்டில் உள்ள தரைப்பாலத்தில், நுரை பொங்க மூழ்கடித்து மழைநீர் வழிந்தோடியது. அதேபோல், இனாம் பைரோஜி, புதுப்பாளையம் ஏரி அருகே உள்ள தரைப்பாலமும் மூழ்கியது.

மேட்டூரில் 5 நாளில் 63.20 மி.மீ., மழை: செப்டம்பர் தொடங்கியது முதல், மேட்டூர், கொளத்தூர் சுற்றுப்பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. கடந்த, 31ல், 15.2 மி.மீ., 2ல், 32.2, 3ல், 15.8 என, 5 நாளில், 63.2 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. கடந்த மாதம் வெயில் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், இந்த மாதம் தொடர்ச்சியாக மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X