பெண் பணியாளருக்கு மகப்பேறு விடுப்பு; செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெண் பணியாளருக்கு மகப்பேறு விடுப்பு; செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

Added : செப் 05, 2021
Share
பனமரத்துப்பட்டி: தமிழ்நாடு மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர், தூய்மை காவலர், தூய்மை பணியாளர் சங்க, சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாநில தலைவர் கிருஷ்ணன், ஊராட்சி செயலர்கள் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ், ஊராட்சி அனைத்து பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சார்லஸ் உள்பட பலர் பேசினர்.

பனமரத்துப்பட்டி: தமிழ்நாடு மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர், தூய்மை காவலர், தூய்மை பணியாளர் சங்க, சேலம் மாவட்ட செயற்குழு கூட்டம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். மாநில தலைவர் கிருஷ்ணன், ஊராட்சி செயலர்கள் சங்க மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ், ஊராட்சி அனைத்து பணியாளர்கள் சங்க மாநில தலைவர் சார்லஸ் உள்பட பலர் பேசினர். அதில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவருக்கு காலமுறை ஊதியம், பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்குதல்; தூய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம், மாதம், 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குதல்; கல்வி தகுதி அடிப்படையில் பதவி உயர்வு, மாதம் முதல் தேதியில் சம்பளம் தருதல்; பெண் பணியாளர்களில், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர், தூய்மை காவலர், தூய்மை பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குதல்; கொரோனா சமயத்தில் பணிபுரிந்தோருக்கு அரசு அறிவித்த, 15 ஆயிரம் ரூபாய் ஊக்கதொகை வழங்குதல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சி செயலர் சங்கத்தின் மாநில பொருளாளர் மகேஸ்வரன், பனமரத்துப்பட்டி ஒன்றிய தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X