சேலம் மாவட்டத்தில் 13 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தில் 13 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது

Added : செப் 05, 2021
Share
சேலம்: சேலம் மாவட்டத்தில், 13 ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். ஆசிரியர் தினமான செப்., 5ல், தமிழகத்தில் சிறந்த ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் நடக்கும் விழாவில், டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டில், கொரோனா சூழலால், அந்தந்த மாவட்டங்களில் விழா நடத்தி, விருது வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சேலம்: சேலம் மாவட்டத்தில், 13 ஆசிரியர்கள், மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். ஆசிரியர் தினமான செப்., 5ல், தமிழகத்தில் சிறந்த ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் நடக்கும் விழாவில், டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டில், கொரோனா சூழலால், அந்தந்த மாவட்டங்களில் விழா நடத்தி, விருது வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநில நல்லாசிரியர் விருதுக்கு, சேலம் மாவட்டத்தில், 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விபரம்: பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாதேஸ்வரன்; பட்டதாரி ஆசிரியர்களில் இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ரமேஷ்; தாண்டவராயபுரம் அரசு மேல்நிலை ரவிக்குமார்; செட்டிச்சாவடி அரசு உயர்நிலை சுரேஷ்குமார்; கொங்குப்பட்டி அரசு உயர்நிலை பாஸ்கர்; பண்ணப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் ஆறுமுகம் ஆகியோர், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைமை ஆசிரியர்களான, வாழப்பாடி காலனி துவக்கப்பள்ளி ஷபிராபானு, வாழப்பாடி, காளியம்மன்புதூர் துவக்கப்பள்ளி ஸ்ரீதர், காடையாம்பட்டி ஒன்றியம், நடுப்பட்டி துவக்கப்பள்ளி பாரதி; அரிசிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சரவணன்; கன்னங்குறிச்சி துவக்கப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சாந்தி ஆகியோர் துவக்க, நடுநிலைப்பள்ளிகள் பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கெங்கவல்லி, ஓடைக்காட்டுப்புதூர், அரசு பழங்குடியினர் நல உறைவிட தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியை சத்யா, தனியார் பள்ளி ஆசிரியர்களில், சேலம் குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ரோஸ்லின் ஆகியோர், மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X