பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1 லட்சம் கோடி வரை எரிபொருள் சேமிக்கலாம்: பி.ஆர்.பி., கண்டுபிடித்த ஐ.ஐ.டி., பேராசிரியர் தகவல்

Added : செப் 05, 2021
Share
Advertisement
மகுடஞ்சாவடி: ''நுண்ணிய கதிரியக்க பர்னர் மூலம், ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை எரிபொருள் சேமிக்கலாம்,'' என, ஐ.ஐ.டி., பேராசிரியர் முத்துக்குமார் கூறினார்.சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, மாட்டையாம்பட்டி, தெசவிளக்கை சேர்ந்தவர் முத்துக்குமார், 45. அசாம், கவுகாத்தி ஐ.ஐ.டி.,யில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் சமையல், தொழில்துறை பயன்பாடுக்கு, நுண்ணிய கதிரியக்க பர்னர் (பி.ஆர்.பி.,)

மகுடஞ்சாவடி: ''நுண்ணிய கதிரியக்க பர்னர் மூலம், ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை எரிபொருள் சேமிக்கலாம்,'' என, ஐ.ஐ.டி., பேராசிரியர் முத்துக்குமார் கூறினார்.


சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, மாட்டையாம்பட்டி, தெசவிளக்கை சேர்ந்தவர் முத்துக்குமார், 45. அசாம், கவுகாத்தி ஐ.ஐ.டி.,யில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் சமையல், தொழில்துறை பயன்பாடுக்கு, நுண்ணிய கதிரியக்க பர்னர் (பி.ஆர்.பி.,) குறித்து மேற்கொண்ட ஆராய்ச்சி, தொழில்நுட்ப பங்களிப்புக்கு, 2021க்கான, 'அப்துல்கலாம் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு தேசிய விருது', அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த ஆக., 31ல் அறிவித்தது.

இந்த விருது பெறும் முதல் தமிழரான முத்துக்குமார் கூறியதாவது: நாடு முழுதும் இத்தொழில்நுட்ப வணிக மயமாக்கலால் அரசுக்கு ஆண்டுக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை எரிபொருள் சேமிக்க முடியும். உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த பி.ஆர்.பி.,யால், சமையல் அடுப்புகளை, வழக்கமான செயல்திறனுடன் ஒப்பிடும்போது, 30 முதல், 60 சதவீத எரிபொருள் சேமிப்பு, உமிழ்வில், 70 முதல், 80 சதவீத குறைப்புடன் சிறந்த செயல்திறனை அளிக்கின்றன. பி.ஆர்.பி.,க்களை, சமையல், தொழில்முறை பயன்பாடுக்கு, எல்.பி.ஜி., பயோகாஸ், மண்ணெண்ணெய், மெத்தனால், சி.என்.ஜி., பி.என்.ஜி., போன்ற எரிபொருட்களுக்கு திறம்பட பயன்படுத்தலாம். தொழில்துறை பங்களிப்பு மூலம், ஓராண்டில் இத்தொழில்நுட்பத்தை வணிகமயமாக்க என் ஆராய்ச்சி குழு முடிவு செய்துள்ளது. எங்கள் கண்டுபிடிப்பு, பர்னர் அடிப்படையிலான பயன்பாடுகளில் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும். உலக அளவில் பல மில்லியன் டாலர் சந்தைக்கு வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X