பலாத்கார வழக்கில் சிக்கியவர் 4 ஆண்டுக்கு பின் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பலாத்கார வழக்கில் சிக்கியவர் 4 ஆண்டுக்கு பின் கைது

Added : செப் 05, 2021
Share
ஆத்தூர்: போக்சோ, பலாத்கார வழக்கில் சிக்கியவர், நான்கு ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டார். வாழப்பாடி, தும்பல் ஊராட்சி, அம்பேத்கர் நகரை சேர்ந்த, கூலித்தொழிலாளி ஸ்டாலின், 27. இவர் மீது, 2014ல், 19 வயது பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாக, ஆத்தூர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர். 2015ல், 17 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த புகாரில், ஏத்தாப்பூர் போலீசார், 'போக்சோ'

ஆத்தூர்: போக்சோ, பலாத்கார வழக்கில் சிக்கியவர், நான்கு ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டார். வாழப்பாடி, தும்பல் ஊராட்சி, அம்பேத்கர் நகரை சேர்ந்த, கூலித்தொழிலாளி ஸ்டாலின், 27. இவர் மீது, 2014ல், 19 வயது பெண்ணை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாக, ஆத்தூர் மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர். 2015ல், 17 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த புகாரில், ஏத்தாப்பூர் போலீசார், 'போக்சோ' வழக்குப்பதிந்தனர். இரு வழக்குகளிலும், தலைமறைவாக இருந்த ஸ்டாலினுக்கு, சேலம் மகிளா நீதிமன்றம், 'பிடிவாரன்ட்' பிறப்பித்து உத்தரவிட்டது. விசாரணையில், ஸ்டாலின் ஓராண்டுக்கு முன் திருமணம் செய்து கொண்டு, கோவையில் பதுங்கியிருந்தது தெரிந்தது. நேற்று, ஆத்தூர் தனிப்படை போலீசார், அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X