பொது செய்தி

தமிழ்நாடு

12 தொழிலாளர் பணிநீக்கம் சட்ட விரோதம்: ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலாளர் பேட்டி

Added : செப் 05, 2021
Share
Advertisement
ஓசூர்: ''ஓசூரில், 12 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்தது சட்ட விரோதமானது,'' என, ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலாளர் மனோகரன் கூறினார்.இது குறித்து அவர், ஓசூரில் நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இயங்கி வரும், மெகா ரப்பர் என்ற தனியார் நிறுவனம், அங்கு பணியாற்றி வந்த, 12 நிரந்தர தொழிலாளர்களை கடந்தாண்டு அக்.,ல் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்தது. கொரோனா காலம்

ஓசூர்: ''ஓசூரில், 12 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்தது சட்ட விரோதமானது,'' என, ஐ.என்.டி.யு.சி., தேசிய செயலாளர் மனோகரன் கூறினார்.


இது குறித்து அவர், ஓசூரில் நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இயங்கி வரும், மெகா ரப்பர் என்ற தனியார் நிறுவனம், அங்கு பணியாற்றி வந்த, 12 நிரந்தர தொழிலாளர்களை கடந்தாண்டு அக்.,ல் வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் செய்தது. கொரோனா காலம் என்பதால், தொழிலாளர்கள் அங்கு செல்ல விரும்பவில்லை. இதை காரணம் கூறி, அவர்களை பணியிலிருந்து கடந்த டிச., 31ல் நிறுவனம் நீக்கியது. அதற்கு முன்னதாகவே, கிருஷ்ணகிரி தொழிலாளர் நல உதவி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டு, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்நேரத்தில் பணியிலிருந்து தொழிலாளர்களை நீக்கக்கூடாது என்பது விதி. ஆனால், அதை மீறி தனியார் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது சட்ட விரோதமானது. இது குறித்து, தமிழக முதல்வர், தொழிலாளர் நல ஆணையரிடம் மனு வழங்கப்பட்டது. அவர்கள் நடவடிக்கை எடுக்க கூறினாலும், கிருஷ்ணகிரி உதவி ஆணையர் தனக்கு அதிகாரம் இல்லை எனக்கூறி நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். கடந்த, 10 மாதமாக ஊதியமின்றி, 12 தொழிலாளர்களும் சிரமப்படுகின்றனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X