பொது செய்தி

தமிழ்நாடு

இலவசம் பலபேரை வீழ்த்தி இருக்கிறது: கவர்னர் தமிழிசை

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
கோவில்பட்டி: ‛‛வ.உ.சி.,யின் சுதேசி கப்பல் அவரை வாழவைத்தது. ஆனால், ஆங்கிலேயர்கள் கொடுத்த இலவசம் அவரை வீழவைத்தது. எனவே, அந்தக் காலத்திலேயே இலவசம் பலபேரை வீழ்த்தி இருக்கிறது,'' என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள
VOC, BIRTHDAY, OTTAPIDARAM, THAMILISAI, வஉசி, பிறந்தநாள், புதுச்சேரி கவர்னர், தமிழிசை, மரியாதை

கோவில்பட்டி: ‛‛வ.உ.சி.,யின் சுதேசி கப்பல் அவரை வாழவைத்தது. ஆனால், ஆங்கிலேயர்கள் கொடுத்த இலவசம் அவரை வீழவைத்தது. எனவே, அந்தக் காலத்திலேயே இலவசம் பலபேரை வீழ்த்தி இருக்கிறது,'' என்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஒட்டப்பிடாரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சி., உருவச்சிலைக்கு தெலுங்கானா, புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய நாட்டுக்காக போராடிய அனைத்து சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறுகளையும் இளைஞர்கள் படிக்க வேண்டும். அவர்களுக்கு ரசிகர்களாக இருக்க வேண்டும். அவர்கள் இல்லையென்றால் நாம் இன்று சுதந்திரமாக நடமாட முடியாது.

தென்பகுதியான தூத்துக்குடியில் இருந்து கப்பல் விட்டு இந்தியாவுக்கே வழிகாட்டியவர் வ.உ.சி., பழைய கதைகளை பேசுவது மட்டுமல்ல, நாம் பின்பற்ற வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த இடங்களை தேடி சென்று பார்த்து, அவர்கள் குறித்து படித்து அறிய வேண்டும். இதைத்தான் பிரதமர் கூறியுள்ளார்.


latest tamil news



வ.உ.சி.,யின் சுதேசி கப்பல் அவரை வாழவைத்தது. ஆனால், ஆங்கிலேயர்கள் கொடுத்த இலவசம் அவரை வீழவைத்தது. எனவே, அந்த காலத்திலேயே இலவசம் பலபேரை வீழ்த்தி இருக்கிறது என்பதை தூத்துக்குடி மண் உணர்த்தி உள்ளது. அவர் மறைந்த பின்னர் அவரை பற்றி நாம் யோசிக்கிறோம். ஆனால், அவர் வாழ்ந்த காலத்தில், இந்த மண்ணுக்காக பாடுபட்டவர், கடைசி காலத்தில் மண்ணெண்ணெய் விற்றுக் கடனாளியானார்.

அந்த நேரத்தில் அவருக்கு உதவிட யாருமில்லை. அதனால் மொழிக்காகவும், நாட்டுப்பற்றுக்காகவும், சமூகத்துக்காகவும் பாடுபட்டு கொண்டிருப்பவர்கள் இருந்தால், அவர்கள் வாழும் காலத்திலேயே அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்ய நாம் பழகிக்கொள்ள வேண்டும். நான் கவர்னராக உள்ள 2 மாநிலங்களிலும் விநாயகர் சிலையை பொது இடங்களிலும் வைப்பதற்கும், விநாயகர் ஊர்வலத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழிசை கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
E. RAJAVELU - Chennai,இந்தியா
06-செப்-202119:01:47 IST Report Abuse
E. RAJAVELU மற்ற காட்சிகள் இலவசம் கொடுத்து ஜெயிப்பாங்க, அவர்களை பீஜேபி பணம் கொடுத்து வாங்கிவிடும்......
Rate this:
Cancel
06-செப்-202116:13:28 IST Report Abuse
அப்புசாமி சரியாகச் சொன்னேள். வ.உ.சி யை வீழ்த்திய அதே பிரிட்டிஷ் காராளோடத்தான் தூத்துக்குடி பக்கத்துல தனுஷ்கோடியில் குத்தாட்டம் போட ஒன்றியவாள் ரெடியா இருந்தா. நல்ல வேளை போரிஸுக்கு கொரோனா வந்து அது நின்னு போச்சு.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
06-செப்-202113:44:43 IST Report Abuse
RajanRajan தயிர் வடை அறிமுகம் செய்த இலவசம் என்பது சட்டமாக்க பட்ட லஞ்ச ஊழலால் வீழ்ந்தது பலபேர் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழக பொருளாதாரமே சந்தித்தது வீழ்ச்சி ஒன்றை தான். அத்தனை இலவசங்களிலும் அரசியல்வாதிகளின் ஆட்சியாளர்களின் லஞ்ச ஊழல் முத்திரை பாதிக்கப்பட்டுள்ளதே. கடைசியில் மக்களை 2 .63 லட்ச்சம் மறைமுக கடனில் சிக்க வைத்து வேடிக்கை காட்டுகிறார்கள் இந்த திராவிட களவாணிகள். இதை விட வேறு அவலம் இருக்க முடியாது. மத்திய அரசும் சரி மாநில அரசும் சரி ஒரு போதும் இலவம் மானியங்களை ஊக்குவிக்க கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X