பொது செய்தி

தமிழ்நாடு

ஓசூர் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: கிருஷ்ணகிரியில் கருத்து கேட்பால் அதிருப்தி

Added : செப் 05, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் சிறப்பு நிலை நகராட்சியாக இருந்தபோது, எட்டு பஞ்.,க்களை இணைத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்த, அ.தி.மு.க., அரசு முடிவு செய்தது. இதற்கு பெரும்பாலான பஞ்., மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஏற்கனவே உள்ள வார்டுகளுடன் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, ஓசூர் மாநகராட்சியுடன், அக்கொண்டப்பள்ளி, பேரண்டப்பள்ளி, பேகேப்பள்ளி, சென்னசந்திரம், கொத்தகொண்டப்பள்ளி,

ஓசூர்: ஓசூர் சிறப்பு நிலை நகராட்சியாக இருந்தபோது, எட்டு பஞ்.,க்களை இணைத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்த, அ.தி.மு.க., அரசு முடிவு செய்தது. இதற்கு பெரும்பாலான பஞ்., மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஏற்கனவே உள்ள வார்டுகளுடன் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது, ஓசூர் மாநகராட்சியுடன், அக்கொண்டப்பள்ளி, பேரண்டப்பள்ளி, பேகேப்பள்ளி, சென்னசந்திரம், கொத்தகொண்டப்பள்ளி, நல்லூர், ஒன்னல்வாடி, தொரப்பள்ளி அக்ரஹாரம், பூனப்பள்ளி என மொத்தம், ஒன்பது பஞ்.,க்களை இணைத்து, எல்லையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பஞ்.,க்களில், தொழிற்சாலைகள் அதிகமுள்ளன. அதனால் அப்பஞ்.,க்களுக்கு அதிக வருவாய் வருகிறது. அதை இணைத்தால், மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் என, அதை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்., பகுதிகளில் வசிக்கும் மக்கள், மாநகராட்சியுடன் இணைக்க விருப்பமின்றி உள்ளனர். இந்நிலையில், ஓசூர் எல்லை விரிவாக்கம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடத்தியிருந்தால், மக்கள் பலர் பங்கேற்று கருத்து தெரிவித்திருக்க முடியும். ஆனால், அவ்வாறின்றி, ஓசூரிலிருந்து, 50 கி.மீ., தொலைவிலுள்ள கிருஷ்ணகிரியில் நடத்தியதால், கொரோனா காலத்தில் பஸ் ஏறி அங்கு சென்று, மக்கள் கருத்து தெரிவிக்க முடியவில்லை. எதிர்ப்பு வரக்கூடாது என, கிருஷ்ணகிரியில் நடத்தியதாக மக்கள் புலம்பி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X