சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை திருமணம் செய்து துன்புறுத்தல்; விவசாயிக்கு சிறை

Added : செப் 05, 2021
Share
Advertisement
ஈரோடு: சிறுமியை திருமணம் செய்து, பாலியல் துன்புறுத்தல் அளித்த விவசாயிக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.ஈரோடு, சித்தோடு பச்சப்பாளி ஆண்டிக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் தர்மராஜ், 34. கடந்த, 2019 ஏப்., 11ல் அந்தியூர் எண்ணமங்கலம் செலம்பூர் அம்மன் கோவிலில், 15 வயது சிறுமியை இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்தார். தர்மராஜ்,

ஈரோடு: சிறுமியை திருமணம் செய்து, பாலியல் துன்புறுத்தல் அளித்த விவசாயிக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு, சித்தோடு பச்சப்பாளி ஆண்டிக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் தர்மராஜ், 34. கடந்த, 2019 ஏப்., 11ல் அந்தியூர் எண்ணமங்கலம் செலம்பூர் அம்மன் கோவிலில், 15 வயது சிறுமியை இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்தார். தர்மராஜ், சிறுமியின் விருப்பத்துக்கு மாறாக பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி அங்கிருந்து வெளியேறி பெற்றோரிடம் தெரிவித்தார். இதுகுறித்து, பவானி மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ பிரிவுகளில் வழக்கு பதிந்து தர்மராஜை, 2019 ஏப்., 27ல் கைது செய்தனர். குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் சிறுமியின் தாய், தர்மராஜின் பெற்றோர் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். வழக்கு விசாரணை ஈரோடு மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி மாலதி வழக்கின் இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளித்தார். அதில், தர்மராஜூக்கு குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் இரண்டாண்டு சிறை, 3,000 ரூபாய் அபராதம், போக்சோ சட்டத்தின் கீழ் மூன்றாண்டு சிறை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இதை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். அபராத தொகையை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடனடியாக தர்மராஜ் வழங்க வேண்டும். இதுதவிர சிறுமிக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத்தை ஒரு மாதத்துக்குள் அரசு வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்தார். வழக்கில் தொடர்புடைய மற்ற ஆறு பேர் மீது குற்றம் நிருபிக்கப்படாததால், அவர்களை நீதிபதி விடுதலை செய்தார். அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X