பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1 அடி உயர்வு

Added : செப் 05, 2021
Share
Advertisement
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், ஒரே நாளில், 1 அடி உயர்ந்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட நீர் தொடர்ச்சியாக வரும் நிலையில், தமிழக எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 13 ஆயிரத்து, 570 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 16 ஆயிரத்து, 670 கனஅடியாக

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம், ஒரே நாளில், 1 அடி உயர்ந்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட நீர் தொடர்ச்சியாக வரும் நிலையில், தமிழக எல்லையிலுள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் நேற்று முன்தினம் வினாடிக்கு, 13 ஆயிரத்து, 570 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று, 16 ஆயிரத்து, 670 கனஅடியாக உயர்ந்தது. பாசனத்துக்கு, 5,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. கூடுதல் நீர்வரத்தால் நேற்று முன்தினம், 68.55 அடியாக இருந்த அணை நீர்மட்டம், நேற்று, 69.39 அடியாக, ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X