சம்பவம் செய்தி

தமிழ்நாடு

525 லிட்டர் எரிசாராயம் பதுக்கிய தம்பதியர் கைது

Added : செப் 05, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே வீட்டில், 525 லிட்டர் எரிசாராயம் பதுக்கிய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை அடுத்த, இனாம்காரியந்தல் கிராமத்தில் சாராயம் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து. திருவண்ணாமலை தாலுகா போலீசார், அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது வடிவேல், 65, என்பவரது வீட்டின் பின்புறம், 35 லிட்டர் கொள்ளளவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே வீட்டில், 525 லிட்டர் எரிசாராயம் பதுக்கிய கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை அடுத்த, இனாம்காரியந்தல் கிராமத்தில் சாராயம் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து. திருவண்ணாமலை தாலுகா போலீசார், அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது வடிவேல், 65, என்பவரது வீட்டின் பின்புறம், 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட, 15 கேன்களில் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். வடிவேல், அவர் மனைவி ஜெயலட்சுமி, 50, ஆகியோர் பதுக்கி வைக்கப்பட்ட சாராயத்தை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக செயல்பட்ட சண்முகம், 48, என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X