பஞ்சஷிர் மாகாணத்தில் அவதியுறும் ஆப்கன் மக்கள்: உதவி கோரி ஐ.நா.,வுக்கு கடிதம்

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
பஞ்சஷிர்: ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாத அமைப்பு, பஞ்சஷிர் மாகாணத்தில் ஆட்சியைக் கைப்பற்ற போராடி வருகின்றனர். இதனால் அந்த மாகாணத்தில் வன்முறை வெடித்துள்ளது.இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே ஐ.நா.,வுக்கு கடிதம் மூலம் தனது கருத்தை வலியுறுத்தியுள்ளார். பஞ்சஷிர் மாகாணத்தில் உள்ள குடிமக்களின் உயிரை காக்க
பஞ்சஷிர், மாகாணம், ஆப்கன், மக்கள்,கடிதம், ஐநா

பஞ்சஷிர்: ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாத அமைப்பு, பஞ்சஷிர் மாகாணத்தில் ஆட்சியைக் கைப்பற்ற போராடி வருகின்றனர். இதனால் அந்த மாகாணத்தில் வன்முறை வெடித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே ஐ.நா.,வுக்கு கடிதம் மூலம் தனது கருத்தை வலியுறுத்தியுள்ளார். பஞ்சஷிர் மாகாணத்தில் உள்ள குடிமக்களின் உயிரை காக்க ஐ.நா., இந்த விவகாரத்தில் தலையிட்டு தலிபான்களுடன் சுமூகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அம்ருல்லா சாலே ஆப்கானிஸ்தானின் முன்னாள் கமாண்டர் அகமது ஷா மசூத்-ன் மகன் அகமது மசூத் உடன் தற்போது பஞ்சஷிர் மாகாணத்தில் தலிபான்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர். வடக்கு ஆப்கனில் உள்ள மேலும் சில பகுதிகளை தலிபான்கள் கட்டுக்குள் கொண்டுவர துப்பாக்கி ஏந்தி தாக்குதல் நடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news




ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதியை தலிபான்கள் ஆக்கிரமித்தபோது கிட்டத்தட்ட 2 லட்சத்து ஐம்பதாயிரம் ஆப்கன் குடிமக்கள் பஞ்சஷிர் மாகாணத்துக்குள் தஞ்சம் புகுந்தனர். இதில் பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் ஆகியோரும் அடக்கம். இவர்களது பாதுகாப்புக் கருதி ஐ.நா., உதவ வேண்டும் என்று அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
06-செப்-202108:11:52 IST Report Abuse
Darmavan இதை பற்றி எந்த இடதுசாரிகளாவது கண்டிக்கிறானா கேவலம்
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
05-செப்-202120:53:35 IST Report Abuse
A.George Alphonse இரத்த வெறிகொண்ட இந்த தீவிர வசதிகளுடன் பேச்சுவார்த்தைநடத்தினா ல் இவர்கள் அமைதியாகி மக்களை விட்டுவிடுவார்களா?இவர்களை அந்த ஆண்டவன் மட்டுமே அடக்க முடியும்.இவர்களை கூண்டோடு அழிக்கவும் முடியும்.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
05-செப்-202120:22:10 IST Report Abuse
 Muruga Vel காசு இருக்கும் அரபு நாடுகள் உதவி செய்யலாமே ..எதுக்கு ஐநா ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X