பொது செய்தி

தமிழ்நாடு

வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம்

Added : செப் 05, 2021
Share
Advertisement
திருப்பத்துார்;வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் வந்ததால் பொது மக்கள் ஆனந்தமாக குளித்தனர்.சில நாட்களாக பெய்து வரும் மழையால், திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாலாற்றில் இன்று காலை வெள்ளம் வந்தது. மதியத்திற்கு பிறகு ஓரளவு குறைந்தது. ஆனால் அங்குள்ள தரைப்பாலத்தில் மக்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் ஆனந்தமாக குளித்தனர்.* வேலுார் மாவட்டம், வேலுார்
வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம்

திருப்பத்துார்;வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் வந்ததால் பொது மக்கள் ஆனந்தமாக குளித்தனர்.
சில நாட்களாக பெய்து வரும் மழையால், திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பாலாற்றில் இன்று காலை வெள்ளம் வந்தது. மதியத்திற்கு பிறகு ஓரளவு குறைந்தது. ஆனால் அங்குள்ள தரைப்பாலத்தில் மக்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் ஆனந்தமாக குளித்தனர்.
* வேலுார் மாவட்டம், வேலுார் பாலாற்றில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் ஆற்றில் இறங்க வேண்டாம் என பொது மக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ஆனால் அதை பற்றி கவலைப்படாமல் அந்த வழியாக மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் ஆற்றை கடந்து தண்ணீரில் நடந்து சென்ற வண்ணம் உள்ளது.

* ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் வாலாஜா பாலார் அணைக்கட்டில் இருந்து பல ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் வாலாஜாபேட்டை தாசில்தார் ஆனந்தன் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவேரிப்பாக்கம் பெரிய ஏரிக்கு இன்று சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது தாசில்தார் ஆனந்தன் கூறியதாவது: பாலார் அணைக்கட்டில் இருந்து மகேந்திரவாடி ஏரிக்கு வினாடிக்கு 122 கன அடி நீரும், காவேரிப்பாக்கம் பெரிய ஏரிக்கு 818, சக்கரமல்லுார் ஏரிக்கு 73, துாசி ஏரிக்கு 409 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.தொடர்ந்து ஏரிகளை கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X