சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மருமகளை மிரட்டி கர்ப்பமாக்கிய மாமனார் மீது புகார்

Added : செப் 05, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
வேலுார்:மருமகளை மிரட்டி கர்ப்பமாக்கி பெண் குழந்தை பெற்றெடுத்த பெண் பொன்னை போலீசில் புகார் செய்தார்.வேலுார் மாவட்டம், ஒட்டனேரியை சேர்ந்த 18 வயது பெண் தன் இரண்டு வயது பெண் குழந்தையோடு இன்று பொன்னை போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:2018 ம் ஆண்டு பிப்., மாதம் 22 ம் தேதி எனக்கும், ஆந்திரா மாநிலம் சித்துார் அடுத்த படுவத்துாரை சேர்ந்த ஸ்ரீராமலு என்பவரின்
 மருமகளை மிரட்டி கர்ப்பமாக்கிய மாமனார் மீது புகார்

வேலுார்:மருமகளை மிரட்டி கர்ப்பமாக்கி பெண் குழந்தை பெற்றெடுத்த பெண் பொன்னை போலீசில் புகார் செய்தார்.
வேலுார் மாவட்டம், ஒட்டனேரியை சேர்ந்த 18 வயது பெண் தன் இரண்டு வயது பெண் குழந்தையோடு இன்று பொன்னை போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:2018 ம் ஆண்டு பிப்., மாதம் 22 ம் தேதி எனக்கும், ஆந்திரா மாநிலம் சித்துார் அடுத்த படுவத்துாரை சேர்ந்த ஸ்ரீராமலு என்பவரின் மகன் சதீஷ்குமாருக்கும் திருமணம் நடந்தது.திருமணத்திற்கு பிறகு தான் சதீஷ்குமார் மன நலம் சரியில்லாதவர் என தெரியவந்தது. இதனால் வேறு வழியின்றி படுவத்துாரில் மாமனார் வீட்டில் வசித்து வந்தேன்.
அப்போது எனக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்த மாமனார் பல முறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். நாளடைவில் என்னை மிரட்டியே உல்லாசம் அனுபவித்தார்.இதனால் நான் கர்ப்பமானேன். வேலுாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் ஒட்டனேரியில் உள்ள என் தாய் வீட்டில் என்னையும், குழந்தையையும் விட்டு விட்டு சென்று விட்டார்.
சில நாட்கள் கழித்து குழந்தையோடு நான் மாமனார் வீட்டிற்கு சென்றேன். அப்போது மாமனார் ஸ்ரீராமலு, 55, மாமியார் அம்சவேணி, 50, நாத்தனார் நதியா, 22, ஆகியோர் என்னை அடித்து உதைத்து என்னை கொல்ல முயன்றனர்.
அங்கிருந்தவர்கள் என்னை காப்பாற்றி பொன்னைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது இந்த விஷயத்தை வெளியே சொன்னால் என்னையும், தாய், குழந்தையையும் கொலை செய்து விடுவோம் என ஸ்ரீராமலு மிரட்டல் விடுத்தார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என் பெண் குழந்தை வாழ்வாதரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார் சம்பவம் நடந்த இடம் ஆந்திர மாநிலத்தில் வருவதால் போலீசார் அங்கு சென்று புகார் செய்யும்படி அந்தப் பெண்ணை அனுப்பி வைத்தனர்

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vinu - frankfurt,ஜெர்மனி
11-செப்-202116:00:27 IST Report Abuse
vinu கூட்டாளி ஒருவன் இருக்கிறான்.
Rate this:
Cancel
shakti - vilupuram,கோட்டி டி'ஐவைரி
10-செப்-202112:24:05 IST Report Abuse
shakti முகமது பண்ணிய வேலைகளை இவர் செய்தால் விடுவோமா ???
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
10-செப்-202108:36:34 IST Report Abuse
Sampath Kumar மனித மிருகம் மிகவும் பெருகிவிட்டது காரணம் யார் ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X