தமிழ்நாடு

நிரம்பும் நிலையில் அமராவதி அணை; உபரி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது

Added : செப் 05, 2021
Share
Advertisement
கரூர்: அமராவதி அணை விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால், உபரி தண்ணீர் ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையின் நீர்மட்டம், கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 499 கன அடி தண்ணீர் வந்தது. 90

கரூர்: அமராவதி அணை விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால், உபரி தண்ணீர் ஆறு மற்றும் புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்டுள்ளது.


கேரள மாநிலம் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணையின் நீர்மட்டம், கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 499 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 88.29 அடியாகவும், நீர் இருப்பு, 3,892 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அணை நிரம்ப, இன்னும் ஒன்றரை அடியே உள்ளது. இதனால் அணை நிரம்ப வாய்ப்புள்ளதால், அமராவதி ஆற்றில், 200 கன அடி உபரி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணை பகுதியில், 2 மி.மீ., மழை பெய்துள்ளது.

மாயனூர் கதவணை நிலவரம்: கரூர் அருகே மாயனூர் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 16 ஆயிரத்து, 347 கன அடி தண்ணீர் வந்தது. குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில், 15 ஆயிரத்து, 277 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,120 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.


* கரூர் மாவட்டத்தில், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை வானம் மேக மூட்டமாக இருந்தது. நேற்று மதியம் கரூர் டவுன், திருமாநிலையூர், வெங்கமேடு, பசுபதிபாளையம், தான்தோன்றிமலை, காந்தி கிராமம், செல்லாண்டிபாளையம், திருகாம்புலியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை, 15 நிமிடம் வரை பெய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X