இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டம்: கலெக்டர் தொடங்கி வைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டம்: கலெக்டர் தொடங்கி வைப்பு

Added : செப் 05, 2021
Share
கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து, நேரு யுவகேந்திரா சார்பில் இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டத்தை கலெக்டர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார். இது, தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி, பாரதிதாசன் நகர் நாலாவது தெரு வழியாக சென்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முடிவுற்றது. சோம்பல், மன அழுத்தம், கவலை, நோய்கள் உள்ளிட்டவற்றிலிருந்து விடுபட உடற்தகுதியை மேம்படுத்தும்

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து, நேரு யுவகேந்திரா சார்பில் இந்திய சுதந்திர அமைப்பு ஓட்டத்தை கலெக்டர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார். இது, தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி, பாரதிதாசன் நகர் நாலாவது தெரு வழியாக சென்று மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முடிவுற்றது. சோம்பல், மன அழுத்தம், கவலை, நோய்கள் உள்ளிட்டவற்றிலிருந்து விடுபட உடற்தகுதியை மேம்படுத்தும் வகையிலும், உடற்பயிற்சிக்கான நேரம் ஒதுக்கவும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை பின்பற்றும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திட ஓட்டம் நடந்தது. பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். டி.ஆர்.ஓ.,லியாகத், நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் பிரிட்ஜஸ் கவுசிக், மாவட்ட விளையாட்டு அலுவலர் சுப்பிரமணியம், நேரு யுவகேந்திரா நிகழ்ச்சி அலுவலர் ஜெயப்பிரகாசம், மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X