பொது செய்தி

தமிழ்நாடு

'அனுமதியின்றி கனிமங்கள் எடுத்தால் நடவடிக்கை'

Added : செப் 05, 2021
Share
Advertisement
கரூர்: 'மாவட்டத்தில் அனுமதியின்றி கனிமங்கள் எடுத்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கரூர் கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: அனுமதியின்றி கனிமங்கள் வெட்டி எடுத்துச் செல்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்லும் போது, கைப்பற்றப்படும் வாகனங்கள், கனிமங்கள், கனிமங்களை வெட்ட

கரூர்: 'மாவட்டத்தில் அனுமதியின்றி கனிமங்கள் எடுத்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கரூர் கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: அனுமதியின்றி கனிமங்கள் வெட்டி எடுத்துச் செல்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்லும் போது, கைப்பற்றப்படும் வாகனங்கள், கனிமங்கள், கனிமங்களை வெட்ட பயன்படுத்தப்படும் கனரக இயந்திரம், கருவிகள், இந்தக் குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள், உடந்தையாக உள்ள நபர்கள் மீது கைப்பற்றுகை அலுவலரால் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்படும். மேலும் அவர்கள் மீது, இந்திய தண்டனை சட்டத்தின் கனிமம் மற்றும் சுரங்கம் (மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X