நீதித்துறையில் 50 சதவீத பெண்கள்: தலைமை நீதிபதி ரமணா விருப்பம்

Updated : செப் 07, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி:''நீதித்துறையின் அனைத்து நிலைகளிலும் 50 சதவீத பெண்கள் இடம் பெற வேண்டும்'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.டில்லியில் இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு பாராட்டு விழா நடந்தது. அதில் அவர் பேசியதாவது:நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே
நீதித்துறை ,50 சதவீத பெண்கள், தலைமை நீதிபதி, ரமணா விருப்பம்

புதுடில்லி:''நீதித்துறையின் அனைத்து நிலைகளிலும் 50 சதவீத பெண்கள் இடம் பெற வேண்டும்'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்

.டில்லியில் இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு பாராட்டு விழா நடந்தது. அதில் அவர் பேசியதாவது:நாட்டின் அனைத்து நீதிமன்றங்களிலும் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

பெண் வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலை திறமையாக நடத்துவதிலேயே பல சவால்களை எதிர்கொள்கின்றனர். பெண் வழக்கறிஞர்களில் ஒரு சிலர் மட்டுமே முன்னிலைக்கு வருகின்றனர்.அப்படியே வந்தாலும், அங்கும் சவால்களை அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளாகிவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் இதுவரை 11 பெண் நீதிபதிகள் தான் தான் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தான் உச்ச நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 11 சதவீதத்தை எட்டியுள்ளது. நீதித்துறையின் அனைத்து நிலைகளிலும் பெண்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் 677 நீதிபதிகள் பணியாற்றுகின்றனர். இதில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 81 தான். இந்த நிலை மாற வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தான் அதிகபட்சமாக 11 பெண் நீதிபதிகள் உள்ளனர். ஏழு உயர் நீதிமன்றங்களில் தலா ஒரே ஒரு பெண் நீதிபதி மட்டுமே உள்ளனர். ஐந்து உயர் நீதிமன்றங்களில் பெண் நீதிபதி ஒருவர் கூட இல்லை.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
07-செப்-202100:11:54 IST Report Abuse
Vena Suna இந்த மனிதர் தினமும் ஏதோ பிரச்சினையை கிளப்புகிறார்..
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
06-செப்-202116:59:03 IST Report Abuse
DVRR ஏன் குழந்தாய் ரொம்ப போரடிக்குதா எங்கே பார்த்தாலும் வெறும் ஆம்பிளைகள் கொஞ்சம் பொம்பிளைகள் என்றிருந்தால் கொஞ்சம் கிளு கிளுப்பாக இருக்குமென்றா ??
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
06-செப்-202111:10:08 IST Report Abuse
venkatan பெண்களுக்கு அதிகாரத்தில் பங்களிக்கும் உண்மையான சமூக நீதி என்பதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்து மிகவும் ஏற்புடையதுவரவேற்கத்தக்கது.அரசின் கவனத்துக்கு உரியதும் கூட..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X