பொது செய்தி

இந்தியா

தினமும் 800 மீ.,படகில் பள்ளி செல்லும் 11 ஆம் வகுப்பு மாணவி

Updated : செப் 05, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கோரக்பூர்: உத்திரபிரதேசம் மாநிலம் பஹ்ராம்பூரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் , 11 ஆம் வகுப்பு மாணவி சந்தியா சாஹினி, வீட்டிலிருந்து 800 மீட்டர் துாரத்தில் உள்ள தனது பள்ளிக்குச் செல்ல தினமும் படகில் செல்கிறார். பள்ளிச்சீருடையில் படகில் பயணம் செய்யும் இந்த மாணவியின் தைரியம் மற்றும் கல்விக்கான அர்ப்பணிப்பு காட்சி வைரலாகி அனைவரது பாராட்டுதலை பெற்று வருகிறது.இது

கோரக்பூர்: உத்திரபிரதேசம் மாநிலம் பஹ்ராம்பூரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் , 11 ஆம் வகுப்பு மாணவி சந்தியா சாஹினி, வீட்டிலிருந்து 800 மீட்டர் துாரத்தில் உள்ள தனது பள்ளிக்குச் செல்ல தினமும் படகில் செல்கிறார். பள்ளிச்சீருடையில் படகில் பயணம் செய்யும் இந்த மாணவியின் தைரியம் மற்றும் கல்விக்கான அர்ப்பணிப்பு காட்சி வைரலாகி அனைவரது பாராட்டுதலை பெற்று வருகிறது.



latest tamil news


உத்தரபிரதேசத்தின், கோரக்பூரின் சில பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், 11ம் வகுப்பு மாணவி சந்தியா சஹானி பஹ்ராம்பூரில் உள்ள பள்ளியை அடைய படகில் செல்கிறார். துடுப்பு படக்கில் தினமும் 800 மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்கு தனியாக சென்று வருகிறார். கல்விக்கான அர்பணிப்புடன், தைரியமாக படகு சவாரி செய்யும் மாணவியின் வீடியோ வைரலாகி வருகிறது.


இது குறித்து மாணவி சந்தியா சாஹினி கூறியதாவது: கோவிட் தொற்று பரவல் மற்றும் பொதுமுடக்கத்தால் பள்ளி நீண்ட காலமாக மூடப்பட்டது. தற்போது வெள்ளத்தின் சவாலை எதிர்கொள்கிறோம்.
"என்னிடம் ஸ்மார்ட்போன் இல்லாததால் என்னால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியவில்லை. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது, வெள்ளம் ஏற்பட்டது, எனது படிப்புக்காக நான் முழுமையாக பள்ளியை நம்பியுள்ளேன்.அதனால் நான் படகில் பள்ளியை அடைய முடிவு செய்தேன்".


latest tamil news



கடின உழைப்பால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை என்பதால் வாழ்க்கையில் சவால்களுக்கு பயப்படுவதில்லை.என் பகுதியில் உள்ள பல பெண்கள் பள்ளிக்குச்செல்வதில்லை, ஏனென்றால் அவர்கள் வெள்ள நீருக்கு பயப்படுகிறார்கள்.ஆனால் எனக்கு பயப்பட நேரமில்லை. எனது குறிக்கோள் எனது இலக்கை அடைய நான் தினமும் கடினமாக உழைக்கிறேன் இவ்வாறு சந்தியா சஹானி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
06-செப்-202110:48:04 IST Report Abuse
தத்வமசி நமது வாழ்க்கை முறையையும் அவர்களது வாழ்க்கை முறையையும் ஒப்பிட்டு எழுத முடியாது. காஷ்மீரில் இரவு ஒன்பது மணிக்கு தனியாக ஓடம் ஒட்டிக் கொண்டு பெண் ஒருவர் தல் ஏரியில் செல்வதைக் கண்டேன். விளக்கு கிடையாது. கும்மிருட்டு. ஆனால் அவருக்கு கண் நன்கு தெரியும், திசை தெரியும், சங்கடங்கள் தெரியும். நமக்கு ஆறு மணிக்கு மேலே நமக்கு வெளியே செல்ல பயம் தான். செங்குத்தான மலைகளில் மக்கள் ஏறிச் செல்வதை கண்டேன். நமக்கு மயக்கமே வந்துவிடும். ஆனால் அவர்களுக்கு அல்ல.
Rate this:
Cancel
06-செப்-202107:59:13 IST Report Abuse
SSVA MAHALINGAM எனக்கு பயப்பட நேரமில்லை...இது எப்படி இருக்கு
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
06-செப்-202107:17:14 IST Report Abuse
 Muruga Vel உத்திர காண்டு இமாச்சல மாநிலம் ஜம்மு பகுதிகளில் பெண்கள் இடுப்பில் குழந்தையுடன் மலையிலிருந்து தலையில் விறகுகளுடன் இறங்கி மளிகை சாமான்களுடன் சர்வ சாதாரணமாக ஏறி செல்வதை தினமும் பார்க்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X