அரசியல் செய்தி

தமிழ்நாடு

12ம் தேதி 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தி 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு

Updated : செப் 07, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை:''தமிழகத்தில், வரும் 12ம் தேதி 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தி, 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை சைதாப்பேட்டையின் மடுவாங்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளியில், வருவாய்த் துறை சார்பில் மனுக்கள் பெறும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று
12ம் தேதி 10,000 சிறப்பு முகாம்கள் நடத்தி  20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு

சென்னை:''தமிழகத்தில், வரும் 12ம் தேதி 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தி, 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை சைதாப்பேட்டையின் மடுவாங்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளியில், வருவாய்த் துறை சார்பில் மனுக்கள் பெறும் முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முகாமை துவக்கி வைத்த பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

கேரளாவில், 'நிபா' வைரசால் 12 வயது சிறுவன் பாதிக்கப்பட்ட தகவல் கிடைத்துள்ளது. கேரள எல்லையோர மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தி, கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வருவோரிடம், கொரோனா தொற்று பரிசோதனை முடிவு அல்லது தடுப்பூசி போட்ட ஆவணங்கள் இருந்தால் தான், தமிழக பகுதியில் நுழைய அனுமதிக்கிறோம்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், தெர்மல் ஸ்கேனுடன் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை செய்யும் வசதியும் உள்ளது. இதன் வாயிலாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியர், 13 நிமிடத்தில் பரிசோதனை முடிவை அறியலாம். தமிழகத்தில் இதுவரை 3.50 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

நேற்று மட்டும் 6.20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. நேற்று தான் ஒரே நாளில் அதிகம் பேருக்கு தடுப்பூசி போட்ட தினம்.மத்திய அரசிடம் இருந்து அதிக தடுப்பூசி வரும் நாளாக இன்று உள்ளது. இரண்டு விமானங்களில் 19.22 லட்சம் தடுப்பூசி வர உள்ளது. இதை வைத்து, தமிழக எல்லையில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் அதிக நபர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

தற்போது நம்மிடம் 33 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் 12ம் தேதி 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தி, 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. மாவட்ட கலெக்டர்கள் வாயிலாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
06-செப்-202119:44:06 IST Report Abuse
unmaitamil இனி பிரதமர் மோடியை குறை சொல்ல இவர்களால் முடியாது. விரைவான நடவடிக்கை எடுத்து, தடங்கல் இல்லாமல் , இலவசமாக தடுப்பூசி வழங்கிய மோடிக்கு தமிழக மக்கள் என்றும் நன்றியுடன் இருக்க வேண்டும். அதிலும் குறை காண்பவன் குருட்டு திராவிடனாகத்தான் இருப்பான். கவலை இல்லை.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
06-செப்-202118:31:38 IST Report Abuse
Pugazh V தடுப்பூசி போட த்ராணி எதுக்கு? சிமெண்ட் டில் சிக்ஸரா? சாதிக்க முடியவில்லை யா? என்ன சொல்ல வருகிறார்? ஒரு நூறு பேர் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டால் அது யாரோட.சாதனை?
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
06-செப்-202115:51:45 IST Report Abuse
Pugazh V தடுப்பூசி போட த்ராணி எதுக்கு? சிமெண்ட் டில் சிக்ஸரா? சாதிக்க முடியவில்லை யா? என்ன சொல்ல வருகிறார்? ஒரு நூறு பேர் வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டால் அது யாரோட.சாதனை?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X