அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல்: ஸ்டாலின் ஆலோசனை

Updated : செப் 07, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து, தி.மு.க., நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில், வரும் 15ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஊரக
உள்ளாட்சி தேர்தல்:  ஸ்டாலின் ஆலோசனை

ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து, தி.மு.க., நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில், வரும் 15ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க, மாநில தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்தை இன்று நடத்துகிறது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் வெற்றி வியூகம் குறித்து, ஒன்பது மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் ஆகியோருடன், சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலின் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது உள்ளாட்சி தேர்தலில், அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும்; 100 சதவீதம் வெற்றியை தேடி தர வேண்டும். மக்களின் உள்ளூர் பிரச்னைகளை, குறைகளை கேட்டு, அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கட்சி நிர்வாகிகளை அவர் அறிவுறுத்தி உள்ளார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
06-செப்-202121:08:40 IST Report Abuse
sankaseshan எப்படி கள்ள ஒட்டு போடலாம் நடுநிலை வாக்காளர்க லாய் வாக்கு சாவடிக்கு வராமல் இருக்க என்ன செய்யாலாம் என்பதை ஆலோசனை செய்யவா ?
Rate this:
Cancel
kamal A -  ( Posted via: Dinamalar Android App )
06-செப்-202110:23:31 IST Report Abuse
kamal A மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க வழி வகை செய்து விடாதீர்...
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
06-செப்-202109:38:28 IST Report Abuse
Duruvesan விடியலு, கீசோறு வருவானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X