பொது செய்தி

தமிழ்நாடு

சலவை தொழிலாளர்களுக்கு  தொகுப்பு வீடுகள்

Added : செப் 05, 2021
Share
Advertisement
திருத்தணி : திருத்தணி சலவை தொழிலாளர் சங்கத்தின் மாதாந்திர கூட்டம், தலைவர் நதியா தலைமையில் நேற்று திருத்தணியில் நடந்தது.கூட்டத்தில் வரவு - செலவு கணக்குகள் சரி பார்க்கப்பட்டன. தொடர்ந்து, திருத்தணி வட்டாரத்தில் உள்ள சலவை தொழிலாளர்கள் மற்றும் இதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். சொந்த நிலம் உள்ள குடும்பங்களுக்கு அரசு வழங்கும் இலவச

திருத்தணி : திருத்தணி சலவை தொழிலாளர் சங்கத்தின் மாதாந்திர கூட்டம், தலைவர் நதியா தலைமையில் நேற்று திருத்தணியில் நடந்தது.

கூட்டத்தில் வரவு - செலவு கணக்குகள் சரி பார்க்கப்பட்டன. தொடர்ந்து, திருத்தணி வட்டாரத்தில் உள்ள சலவை தொழிலாளர்கள் மற்றும் இதர சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். சொந்த நிலம் உள்ள குடும்பங்களுக்கு அரசு வழங்கும் இலவச தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.

நகராட்சியின் சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட சலவைத் துறைக்கு சுற்றுச்சுவர், கழிப்பறை மற்றும் துணிகள் காய வைக்க கம்பி வேலிகள் அமைத்து தர வேண்டும்.கொரோனா தொற்று காரணமாக சலவை தொழிலாளர்கள் மற்றும் இதர சமுதாயத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதால், அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் உட்பட 10 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X