எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

அடுக்குமாடி கட்டடங்களில் 'சோலார் பேனல்': சாட்டையை சுழற்ற தயாராகும் அதிகாரிகள்

Added : செப் 05, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அடுக்குமாடி கட்டடங்களில், சூரிய சக்தி மின் உற்பத்திக்கான 'சோலார் பேனல்' அமைக்காமல் பலத்த மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துவது 2003ல் கட்டாயமாக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களும் இதை பின்பற்றும் அளவுக்கு மழை நீர்
அடுக்குமாடி கட்டடங்களில் 'சோலார் பேனல்':  சாட்டையை சுழற்ற தயாராகும் அதிகாரிகள்

சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அடுக்குமாடி கட்டடங்களில், சூரிய சக்தி மின் உற்பத்திக்கான 'சோலார் பேனல்' அமைக்காமல் பலத்த மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துவது 2003ல் கட்டாயமாக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களும் இதை பின்பற்றும் அளவுக்கு மழை நீர் சேகரிப்பில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.அரசாணைஇதையடுத்து, 2006ல் அடுக்குமாடி கட்டடங்களில் சூரிய சக்தி மின்சார உற்பத்திக்காக சோலார் பேனல்கள் அமைப்பதும் கட்டாயமாக்கப்பட்டது.

இதன்படி, நான்கு மாடி மற்றும் அதற்கு மேற்பட்ட அடுக்குமாடி கட்டடங்களில் சோலார் பேனல்கள் அமைக்க வேண்டும். கட்டடத்தின் மேல்தளத்தில் மூன்றில் ஒரு பங்கு இடத்தை பேனல்கள் அமைக்க ஒதுக்க வேண்டும். இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு விதிகளிலும் திருத்தங்கள் செய்யப்பட்டன. இந்த உத்தரவு பொது கட்டட விதிகளிலும் சேர்க்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான கட்டடங்களில் சோலார் பேனல்கள்முறையாக வைக்கப்படுவதில்லை.

இது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:அரசு உத்தரவுப்படி, கட்டடங்களில் சோலார் பேனல்கள் வைக்கப்பட்டுள்ளதா என, பணி நிறைவு சான்று வழங்கும் போது அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வின் போது, பல கட்டடங்களில் தற்காலிக ஏற்பாடாக சோலார் பேனல்கள் வைக்கப்படுகின்றன.மோசடிஅதை புகைப்படம் எடுத்து, பணி நிறைவு சான்றுக்கான கோப்புகளில் சேர்க்கின்றனர்.

அதன்பின், அந்த கட்டடங்களில் சோலார் பேனல்கள் இருப்பதில்லை; சூரிய சக்தி மின்சார உற்பத்தியும் நடப்பதில்லை.பணி நிறைவு சான்று வழங்கப்பட்ட கட்டடங்களின் எண்ணிக்கை, அவற்றின் மின்சார பயன்பாட்டை ஆய்வு செய்த போது இந்த மோசடி தெரியவந்தது. இதையடுத்து, பணி நிறைவு சான்று பெற்ற கட்டடங்களில் சோலார் பேனல்கள் உள்ளதா என ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., - நகர், ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., அதிகாரிகள், இத்தகைய கட்டடங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கும் பணியை துவக்க உள்ளனர். அதிகாரிகள் சாட்டையை சுழற்ற ஆரம்பித்தால் தான் மோசடிகள் முடிவுக்கு வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
--- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PKN - Chennai,இந்தியா
06-செப்-202112:53:32 IST Report Abuse
PKN சாடட்ஐயௌ சுழற்றுவதா கிழித்தார்கள். அடுக்குமாடி குடியிருப்புகளின் drainage மற்றும் sewage waterஐ மழை நீர் வடிகாலில் விடுவதற்கு மறைமுகமாக பணம் வாங்கி கொண்டு அனுமதி அளித்து நீர் நிலைகளை கூடமாக மாற்றி கொண்டிருக்கிறார்கள் தாம்பரம் நகராட்சியை சேர்ந்த அலுவலர்கள் - குறிப்பாக helth inspectors. இடம் APN முதல் தெரு - கேம்ப் ரோடு இந்திரா நகர் அருகில். இந்த தெருவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளில் கழிவு நீரை மழை நீர்கால்வாயில் விட மாதம் மாதம் ஒரு பெரிய தொகையை வசூவித்துவிட்டு அனுமதிக்கிறாய்கள். இது கடந்த 3 வருடமாக நடக்கிறது. இதையே தட்டி கேட்காத அதிகார வர்க்கம் எப்படி சாட்டையை சுழற்றும். அப்படியே சுழற்றினாலும் அது மாமுலுக்காத்தான் இருக்கும்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
06-செப்-202108:31:15 IST Report Abuse
duruvasar நல்லா சுத்துங்கைய்யா. எவ்வளவுக்கெவ்வளவவு அதிகமா சுத்தரீஙங்களோ அந்த அளவுக்கு. நன்மைகள் கிடைக்கும்
Rate this:
Cancel
தமிழன் - Madurai,இந்தியா
06-செப்-202107:17:45 IST Report Abuse
தமிழன் இப்ப எல்லோரும் சோலார் பேனல் வாங்குங்க. அதுலயும் நாம நாலு காசு பண்ணனும்ல?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X