பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியினர் உரிமைகளை வனத்துறை தட்டிப்பறிக்கிறதா?

Added : செப் 05, 2021
Share
Advertisement
வால்பாறை:பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை, வனத்துறையினர் தட்டிப்பறிப்பதாக, செயல்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு பழங்குடியின மக்களின் செயல்பாட்பாளர் தனராஜ், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறையில், வில்லோனி, நெடுங்குன்று செட்டில்மென்ட், சின்கோனா செட்டில்மென்ட், உடுமன்பாறை, கல்லார்குடி, பரமன்குடி, சங்கரன்குடி உள்ளிட்ட

வால்பாறை:பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை, வனத்துறையினர் தட்டிப்பறிப்பதாக, செயல்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு பழங்குடியின மக்களின் செயல்பாட்பாளர் தனராஜ், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறையில், வில்லோனி, நெடுங்குன்று செட்டில்மென்ட், சின்கோனா செட்டில்மென்ட், உடுமன்பாறை, கல்லார்குடி, பரமன்குடி, சங்கரன்குடி உள்ளிட்ட பல்வேறு செட்டில்மென்ட்களில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.

வனத்துறையால் அனுமதிக்கப்பட்ட இடங்களில், வீடு கட்டி, ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் விவசாயம் செய்கின்றனர். வனஉரிமை சட்டம் இந்தியா முழுவதிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, உலாந்தி ஆகிய வனச்சரகங்களில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி வன உரிமை சட்டத்தை முழுமையாக அமல்படுத்தவில்லை.மத்திய அரசு கொண்டு வந்துள்ள, வனஉரிமை சட்டத்தை அமல்படுத்த வனத்துறையினர் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர்.
பழங்குடியின மக்கள் விவசாயம் செய்த பொருட்களை விற்பனைக்காக வெளியில் எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.வன உரிமை சட்டத்தின் படி, அனைத்து கிராமங்களையும் ஒன்றிணைத்து, வருவாய் கிராமங்களாக மாற்ற வேண்டும். புலிகள் காப்பகம் என்ற பெயரில், பழங்குடியின மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வால்பாறை, கல்லார்குடி பழங்குடியின மக்களுக்கு நிரந்தரமாக வீடு கட்ட இடம் தரக்கோரி, அக்.,2ம் தேதி வால்பாறையில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, தெரித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X