பொது செய்தி

தமிழ்நாடு

சிற்றுார்களில் ஆரம்ப சுகாதார நிலையம் விழுப்புரம் எம்.எல்.ஏ., கோரிக்கை

Added : செப் 05, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் நகரில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என சட்டசபையில் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்து பேசினார்.சட்டசபை கூட்டத் தொடரில் விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன் பேசியதாவது:கொரோனா பரிசோதனை செய்யும் கருவிகளை கொள்முதல் செய்வதில் துவங்கி, முன்கள பணியாளர்களுக்கு வழங்கிய உணவுக்கான தொகை வரை சுரண்டியோரை

விழுப்புரம் : விழுப்புரம் நகரில் உள்ள அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என சட்டசபையில் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்து பேசினார்.

சட்டசபை கூட்டத் தொடரில் விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன் பேசியதாவது:கொரோனா பரிசோதனை செய்யும் கருவிகளை கொள்முதல் செய்வதில் துவங்கி, முன்கள பணியாளர்களுக்கு வழங்கிய உணவுக்கான தொகை வரை சுரண்டியோரை சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை அறிமுகம் செய்ய 257.16 கோடி ரூபாய் ஒதுக்கியதை வரவேற்கிறேன்.கொரோனா தொற்றால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் இந்தியாவில் அதிகமுள்ளதால் முதல்வர் ஸ்டாலின் கொரோனா சிகிச்சை செலவுகளை காப்பீட்டில் சேர்த்திருப்பதற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.விழுப்புரம் நகரில் உள்ள மருத்துவமனையை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக உயர்த்த வேண்டும்.

கிராமப்புற ஏழைகள் வாழும் தொகுதியில் மக்களுக்கான மருத்துவத் தேவைகள் அதிகம் இருப்பதால் கப்பூர், ஆனாங்கூர், செங்காடு சிற்றுார்களில் ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்திட வேண்டும்.இவ்வாறு லட்சுமணன் எம்.எல்.ஏ., பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X