போலீஸ் டைரி

Added : செப் 05, 2021
Share
Advertisement
மேலாளரிடம் பணம் பறிப்புதிருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, மணவாள நகரைச் சேர்ந்தவர், அஷஸ்கான், 24. காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள, தனியார் கம்பெனி ஒன்றில், மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.கடந்த, 27ம் தேதி இரவு, இவர் பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டபோது, வழியில், 10 பேர் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து, தாக்கி, அவரிடம் இருந்த, 5,000 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டது.பின் அவரது

மேலாளரிடம் பணம் பறிப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, மணவாள நகரைச் சேர்ந்தவர், அஷஸ்கான், 24. காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள, தனியார் கம்பெனி ஒன்றில், மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.


கடந்த, 27ம் தேதி இரவு, இவர் பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டபோது, வழியில், 10 பேர் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து, தாக்கி, அவரிடம் இருந்த, 5,000 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டது.பின் அவரது இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தி தப்பிவிட்டது. இதுகுறித்து, அஷிஸ்கான், நேற்று முன்தினம், திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.

5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பொன்னேரி: பொன்னேரி அடுத்த ஆலாடு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு, லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, டாடா லாரியில் ஏற்றி வைக்கப்பட்டிருந்த 5 டன் எடை கொண்ட 100 மூட்டை ரேஷன் அரிசி இருப்பதை கண்டனர்.


ரேஷன் அரிசி மூட்டைகள் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த லாரியில் ஏற்றப்பட்டது தெரிந்தது. போலீசார் அவற்றை கைப்பற்றி, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.கடத்தலில் தொடர்புடைய பொன்னேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரேஷன் கடை விற்பனையாளர் தாமோதரன், 61, கும்மிடிப்பூண்டியை சேர்ந்த லாரி டிரைவர் செல்வம், 23, ஆகிய இருவரை கைது செய்தனர்.

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருத்தணி: திருத்தணி அடுத்த, முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்தவர் சக்திவேல், 27. இவர், நேற்று, இருசக்கர வாகனத்தில் மாமனார் பெருமாள், 42, மைத்துனர் வினாயகம்,30 ஆகியோரை ஏற்றிக் கொண்டு திருத்தணி பஜாருக்கு வந்தார்.


அங்கு பணிகளை முடித்துக் கொண்டு மூவரும் அதே வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, தாழவேடு அருகே, முருக்கம்பட்டு கூட்டுச்சாலையில் எதிரே வந்த டிராக்டர் மோதியதில் சம்பவ இடத்திலேயே சக்திவேல் இறந்தார். பெருமாள், வினாயகம் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.தீப்பிடித்து பெண் மரணம்திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம், புதுபனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பன் மனைவி மல்லிகா, 51. இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வரும். இந்நிலையில், கடந்த மாதம், 29ம் தேதி மல்லிகா 'காஸ் ஸ்டவ்'வில் சமையல் செய்யும் போது திடீரென வலிப்பு நோய் வந்ததால், ஸ்ட்வ் மீது விழுந்தார்.

இதில், மல்லிகாவின் சேலையில் தீப்பிடித்து பலத்த காயம் அடைந்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், அங்கு, நேற்று இறந்தார். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

பெண் தற்கொலை
திருத்தணி: திருத்தணி அடுத்த, வி.சி.ஆர்.கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் கோவர்தனன் மனைவி சோனியா, 26. இவருக்கு, 2013ல் திருமணம் நடந்து, கயல்விழி, 13 என்ற மகளும், சுனில், 4 என, மகனும் உள்ளனர்.


இந்நிலையில்,சோனியாவிற்கு மகன் பிறந்த போது, மருத்துவர்கள் உங்கள் வயிற்றில் கட்டிஉள்ளதால் வயிற்று வலி அடிக்கடி வரும் என கூறியதாக தெரிகிறது. மேலும், இரு ஆண்டுகளாக சோனியா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தவர், கடந்த மாதம், 31ம் தேதி மனமுடைந்து, விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.சோனியாவை, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று அதிகாலை இறந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

விபத்தில் புதுமாப்பிள்ளை பலி
நகரி: சித்துார் மாவட்டம், கள்ளூர் அடுத்த, புரவலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் நரேஷ், 25. இவருக்கு, இரு மாதம் முன், அதே பகுதியைச் சேர்ந்த, 22 வயது பெண்ணுடன் திருமணம் நடந்தது.


இந்நிலையில், நேற்று முன்தினம் நரேஷ், இருசக்கர வாகனத்தில் புளிசெர்லா பகுதியில் இருந்து, சொந்த ஊருக்கு வந்துக் கொண்டிருந்தார்.அப்போது, பெனுபாலா காலனி அருகே, எதிரே வந்த ஆட்டோ, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், நரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். கள்ளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

நீரில் மூழ்கி வாலிபர் இறப்பு
நகரி: வேலுார் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் குழு, சுற்றுலா பயணமாக, சித்துார் மாவட்டம்,தலகோண பகுதிக்கு வந்திருந்தனர். அங்குள்ள நீர் வீழ்ச்சியில் சந்தோஷ், 19, என்பவர், நண்பர்களுடன் குளிக்க சென்றார்.


அப்போது, நீர்வீழ்ச்சி பகுதியில் ஆழமான பகுதிக்கு சென்ற சந்தோஷ் தண்ணீரில் மூழ்கி இறந்தார். எர்வாரிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X