நகராட்சி வாடகை உயர்வு ரொம்ப அதிகமுங்க! குத்தகைதாரர்கள் புலம்பல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நகராட்சி வாடகை உயர்வு ரொம்ப அதிகமுங்க! குத்தகைதாரர்கள் புலம்பல்

Added : செப் 05, 2021
Share
மேட்டுப்பாளையம்:நகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக, கடைகளின் வாடகையை, மிக அதிகபட்சமாக உயர்த்தியுள்ளது. இந்த வாடகையை குறைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடை குத்தகைதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையத்தில், நகராட்சிக்கு சொந்தமாக 238 கடைகள் உள்ளன. கடந்த, 2016ல் கடைகளின் வாடகை, உயர்த்தப்பட்டது.பல மடங்கு உயர்த்தப்பட்டதால், பல குத்தகைதாரர்கள்,

மேட்டுப்பாளையம்:நகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக, கடைகளின் வாடகையை, மிக அதிகபட்சமாக உயர்த்தியுள்ளது. இந்த வாடகையை குறைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கடை குத்தகைதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேட்டுப்பாளையத்தில், நகராட்சிக்கு சொந்தமாக 238 கடைகள் உள்ளன. கடந்த, 2016ல் கடைகளின் வாடகை, உயர்த்தப்பட்டது.பல மடங்கு உயர்த்தப்பட்டதால், பல குத்தகைதாரர்கள், தங்களால் வாடகை செலுத்த முடியாது என, நகராட்சியிடம் கடைகளை ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் கடை வியாபாரிகளில் சிலர், வாடகை உயர்வை குறைக்கக் கோரி, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.அப்போதைய நகராட்சி நிர்வாக கமிஷனர், 'நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரை தலைவராகக் கொண்ட, கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.அப்போதைய அங்காடி மதிப்பில் மறு நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைக்கு, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், ஒப்புதல் வழங்க வேண்டும்.அதன் பின்னரே, அந்த குத்தகை நிர்ணயம் குறித்து, நகரமன்ற அனுமதி பெற வேண்டும். இதைத்தொடர்ந்து, குத்தகைதாரரிடம் தெரிவித்து, வாடகை பெற வேண்டும்.
குத்தகைதாரர் ஒப்புக்கொள்ளாத பட்சத்தில், பொது ஏலத்தில் விடலாம்' என, உத்தரவிட்டிருந்தார்.ஆனால், இந்த உத்தரவை, மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகள் கடைப்பிடிக்காமல், தன்னிச்சையாக வாடகையை உயர்த்தி உள்ளனர். இந்த வாடகையை செலுத்த முடியாமல், குத்தகைதாரர்கள் அவதிப்படுகின்றனர்.பரிந்துரை கடிதம்இதற்கிடையில் கடந்த, 2018ல், அப்போதைய நகராட்சி கமிஷனர், நகராட்சி நிர்வாக கமிஷனருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.அதில், நகராட்சிக்கு சொந்தமான கடைகளில், ஒன்பது ஆண்டுகள் முடிவுற்ற கடைகளுக்கு, அங்காடி மதிப்பின்படி, மாத வாடகை நிர்ணயம் செய்ததில் வாடகை அதிகமாக உள்ளது என, 66 கடை குத்தகைதாரர்கள், நகராட்சியிடம் கடைகளை திருப்பி ஒப்படைத்து விட்டனர்.மேலும், பஸ் ஸ்டாண்ட் நகராட்சி வணிக வளாகத்தில், தரைத்தள கடைகளுக்கும், மாடி கடைகளுக்கும், ஒரே மாதிரியான வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கடைகளின் மாத வாடகை, 1,822 மற்றும் 2,771 ரூபாயாக இருந்ததை, 9,450 ரூபாய் என நிர்ணயித்துள்ளனர்.
இதனால் பல குத்தகைதாரர்கள், வாடகை செலுத்த முடியாமல், கடைகளை திருப்பிக் கொடுத்துவிட்டனர். புதிய வாடகை மதிப்பின்படி, 10 மாதங்களுக்கு, ஒரு கோடியே, 61 லட்சத்து, 85 ஆயிரத்து, 500 ரூபாய் நகராட்சிக்கு இழப்பு ஏற்படுகிறது.திருத்திய அரசாணை அல்லது அனைத்து நகராட்சிகளிலும் நடைமுறையிலுள்ள அரசு ஆணைப்படி, வாடகை நிர்ணயம் செய்தால் மட்டுமே நிதி இழப்பை தவிர்க்கலாம், என பரிந்துரை செய்துள்ளார்.
நோட்டீஸ்

கடைகளின் வாடகை அதிகமாக உள்ளது என, குத்தகைதாரர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் உள்ளனர். இதனால் நகராட்சிக்கு, 5 கோடி ரூபாய்க்கு மேல் வாடகை பாக்கி உள்ளது.இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி கமிஷனர், 10 நாட்களுக்குள் வாடகை பாக்கியை உடனடியாக செலுத்த வேண்டும். செலுத்தாத பட்சத்தில், கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.இதுகுறித்து நகராட்சி கடை குத்தகைதாரர்கள் கூறுகையில்,'வாடகை அதிகமாக உள்ளதால், செலுத்த முடியவில்லை. எனவே, தமிழக அரசு வாடகையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X