பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்தி வீட்டில்தான் கொண்டாடணும்: ஆலோசனைக் கூட்டத்தில் 'கறார்'

Added : செப் 05, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:"பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், விழா கொண்டாடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது," என, கோவை வடக்கு ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.விநாயகர் சதுர்த்தி விழா குறித்து, மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது. கோவை வடக்கு ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு,
 விநாயகர் சதுர்த்தி வீட்டில்தான் கொண்டாடணும்: ஆலோசனைக் கூட்டத்தில் 'கறார்'

மேட்டுப்பாளையம்:"பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், விழா கொண்டாடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது," என, கோவை வடக்கு ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.விநாயகர் சதுர்த்தி விழா குறித்து, மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நடந்தது. கோவை வடக்கு ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தனிநபர்கள் தங்கள் இல்லங்களில், விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தனிநபர்கள் வழிபட்ட விநாயகர் சிலைகளை, கரைக்க முடியவில்லை எனில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, கோவில்களின் முன்பு வைக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிலைகளை தனிநபர்கள் கொண்டு சென்று, நீர் நிலைகளில் கரைக்கலாம். அமைப்புகளின் சார்பாக, சிலைகளை எடுத்துச் சென்று, நீரில் கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட நேரத்தில், சமூக இடைவெளி பேணி, சிலைகளை கரைக்க வேண்டும். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை, கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க, ஊர்வலமாகச் சென்று, நீர் நிலைகளில் கரைக்க அனுமதி இல்லை.இவ்வாறு ஆர்.டி.ஒ. பேசினார்.
ஹிந்து அமைப்பினர் பேசுகையில்,'கட்டுப்பாடுகள் தேவைதான். ஆனால் சிலை வைக்கக்கூடாது என தடை போடுவது நியாயம் இல்லை. இது, மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது. நான்கு பேர் பொது இடங்களில், அரசு அறிவித்த சில கட்டுப்பாடுகளுடன், சிலை வைக்கவும், அரசு சொல்லும் வழித்தடங்கள், வழியாக சென்று, ஆற்றில் சிலைகளை கரைக்க அனுமதிக்க வேண்டும்' என்றனர்.மேட்டுப்பாளையம் தாசில்தார் ஷர்மிளா, டி.எஸ்.பி. ஜெய்சிங், இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், தவமணி, குமார், மண்டல துணை தாசில்தார் பாலமுருகன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், ஹிந்து முன்னணி கோட்ட செயலாளர் ராஜ்குமார், உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர்பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X