பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் பெற்றோர் இறப்பு மகள்களுக்கு ரூ.38 லட்சம்

Added : செப் 05, 2021
Share
Advertisement
சென்னை--விபத்தில் இறந்த தம்பதியின் மகள்களுக்கு 38.68 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் பாண்டூரைச் சேர்ந்தவர் சபாபதி, 32; மேஸ்திரி. இவரது மனைவி பவானி, 31: சித்தாள். இருவரும் 2016 மார்ச்சில் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி 'பைக்'கில் சென்றனர். சபாபதி பைக்கை ஓட்ட, பவானி பின்புறம்

சென்னை--விபத்தில் இறந்த தம்பதியின் மகள்களுக்கு 38.68 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் பாண்டூரைச் சேர்ந்தவர் சபாபதி, 32; மேஸ்திரி. இவரது மனைவி பவானி, 31: சித்தாள். இருவரும் 2016 மார்ச்சில் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி 'பைக்'கில் சென்றனர். சபாபதி பைக்கை ஓட்ட, பவானி பின்புறம் அமர்ந்திருந்தார். மாமண்டூர் அருகே சென்ற போது, அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் வந்த டிராக்டர், சபாபதியின் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சபாபதி, பவானி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.பெற்றோர் இறப்புக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, சபாபதி - பவானியின் மகள்கள் மீனாட்சி, கன்னியம்மாள் இருவரும், சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு விசாரணை, நீதிபதி ஆர்.வேல்ராஜ் முன் நடந்தது.

விசாரணைக்கு பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்களின் பெற்றோர் இறப்புக்கு, டிராக்டரை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே காரணம். எனவே, மனுதாரர்களின் தந்தை இறப்புக்கு இழப்பீடாக 22.29 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்படுகிறது.அவர் 'ஹெல்மெட்' அணியாததால் 10 சதவீதம் கழிக்கப்பட்டு, 20.06 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.அதே போல, தாய் இறப்புக்கு 18.62 லட்சம் ரூபாய் இழப்பீடாக நிர்ணயிக்கப்படுகிறது. மனுதாரர்களுக்கு மொத்த இழப்பீடாக 38.68 லட்சம் ரூபாயை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், 'ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்' வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X