பொது செய்தி

தமிழ்நாடு

பீமேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம்

Added : செப் 05, 2021
Share
Advertisement
திண்டிவனம் : சனி பிரதோஷத்தையொட்டி, பீமேஸ்வரர் கோவிலில், மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.திண்டிவனம் அடுத்த ஓமந்துாரில் 1,014 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீமேஸ்வரர் கோவில் உள்ளது. போரில் பஞ்சபாண்டவர்கள் இழந்த பொருள் மற்றும் ராஜ்ஜியத்தை மீண்டும் பெற பீமன் வந்து வணங்கியதால் இந்த ஈஸ்வரன் கோவில் பீமேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
 பீமேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷம்

திண்டிவனம் : சனி பிரதோஷத்தையொட்டி, பீமேஸ்வரர் கோவிலில், மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

திண்டிவனம் அடுத்த ஓமந்துாரில் 1,014 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீமேஸ்வரர் கோவில் உள்ளது. போரில் பஞ்சபாண்டவர்கள் இழந்த பொருள் மற்றும் ராஜ்ஜியத்தை மீண்டும் பெற பீமன் வந்து வணங்கியதால் இந்த ஈஸ்வரன் கோவில் பீமேஸ்வரர் என்ற பெயரில் அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இக்கோவிலில், 6 அடி உயர மூலவர் மேற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார்.சனி பிரதோஷமான நேற்று மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், பழங்கள் உட்பட 11 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, உற்சவமூர்த்தி கோவில் உட்பிரகார வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருவெண்ணெய் நல்லுார் ஒட்டனந்தல் கிராமத்தில் புதியதாக கட்டப்பட்ட ஒட்டனந்தலேஸ்வரர் கோவிலில் முதல் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. அதையொட்டி நேற்று முன்தினம் காலை மூலவருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X