'தினமலர்' நாளிதழுக்கு தலைவர்கள் வாழ்த்து

Updated : செப் 07, 2021 | Added : செப் 05, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
'தேசிய தமிழ் நாளிதழான, 'தினமலர்' 70 ஆண்டுகளை நிறைவு செய்து, 71வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. அதற்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை:தினமலர் நாளிதழ் 71வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது, மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. பாமரர்களுக்கு செய்திகளை எடுத்து செல்வதிலும், அனைத்து துறை சார்ந்த
'தினமலர்' நாளிதழுக்கு தலைவர்கள் வாழ்த்து

'தேசிய தமிழ் நாளிதழான, 'தினமலர்' 70 ஆண்டுகளை நிறைவு செய்து, 71வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. அதற்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை:தினமலர் நாளிதழ் 71வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது, மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. பாமரர்களுக்கு செய்திகளை எடுத்து செல்வதிலும், அனைத்து துறை சார்ந்த செய்திகளை, மக்களுக்கு கொண்டு செல்வதிலும், அன்றலர்ந்த மலர் போல, தினமலர் நாளிதழ் மணம் பரப்பி வருகிறது. தினமலர் நாளிதழுக்கு, என் வாழ்த்துகள். இந்த நாளிதழ் இன்னும் பல ஆண்டுகள் சேவை செய்ய கடவுளை பிரார்த்திக்கிறேன்.


இணைப்பு பாலம்

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: 71வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தினமலர் நாளிதழ், மக்களுக்கும், அரசுக்கும் இணைப்பு பாலமாக இருந்து வருகிறது. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், சாதனைகளை மக்களுக்கு எடுத்து சொல்கிறது. அதேவேளையில், அரசின் தவறுகளை சுட்டிக் காட்டுவதிலும் முன்னணியில் உள்ளது. ஆன்மிக செய்திகளை தாங்கி வருவதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. நாளிதழை நடத்தி வரும் நிர்வாகத்தினர் மற்றும் வாசகர்கள் என அனைவருக்கும், என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.


சாதாரணம் அல்ல

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தினமலர் நாளிதழ், 70 ஆண்டுகளை வெற்றியுடன் கடந்து, 71வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறது. இது, சாதாரண நிகழ்ச்சி அல்ல. இத்தனை ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்துவது மிகப்பெரிய சவால். அந்த சவாலை ஏற்று, தினமலர் பொறுப்பாளர்கள் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றனர். தினமலருக்கு என் வாழ்த்துக்கள்.


பெரும்சேவை

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: 1957 ஆகஸ்ட், 6ல், தினமலர் அலுவலகத்திற்கு காமராஜர் வந்து, தமிழகம் சார்பில் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார். இரண்டு மாதம் கழித்து, ஈ.வெ.ரா.,வும் தினமலர் அலுவலகம் வந்து பாராட்டினார். 1969ல், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், தினமலர் அலுவலகம் வந்து பாராட்டி சென்றார். தினமலர் நாளிதழில், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை எழுதிய கவிதை போல, தினமலர் வளர்ந்து கொண்டிருக்கிறது.
விவசாயத்திற்கு, நீர் ஆதாரங்களுக்கு, நீர்பாசனத்திற்கு, தமிழகத்திற்கு என்ன தேவையோ; அதை கட்டுரைகளாக ஆதாரத்துடன் தந்து, தமிழகத்திற்கு பெரும் சேவை செய்து வருகிறது தினமலர்.


உண்மையான ஊடக தர்மம்

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ்: இன்று, 71ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும், தினமலர் நாளிதழ் மற்றும் குழுவுக்கு நல்வாழ்த்துக்கள். தினமலர், தேசத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து வளர்ந்துள்ள ஓர் அமைப்பு. அதீத நேர்மையுடனும், உண்மையான ஊடக தர்மத்திற்கான அர்ப்பணிப்புடனும், தினமலர் பயணம் தொடர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-செப்-202121:12:25 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் குறைகளை தினமலர் சுட்டிக்காட்டும்போதும் சாடாமல் நன்முறையில் சுட்டிக்காட்டுவதால் எதிரான கருத்தியல் கொண்ட அரசியல்வாதிகளும் பாராட்டியிருக்கிறார்கள்
Rate this:
Cancel
Shaikh Miyakkhan - jeddah,சவுதி அரேபியா
06-செப்-202115:07:04 IST Report Abuse
Shaikh Miyakkhan மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்று சொல்லுவார்கள் அதனால் மாற்று கொள்கை இருந்தாலும் எனக்கு தினமலர் மணக்கின்றது காரணம் அதன் ஆழ்ந்த கருத்துக்கள், அதன் சொற்றொடர்கள் , அதன் தமிழாக்கங்கள் ,அதன் நையாண்டிகள், அந்த அந்த காலத்திற்கு ஏற்ற படைப்புகள் தேர்தல் நேரத்தில் கிசு, கிசுக்கள் இன்னும் ஏராளம் அதுவும் தாராளமாக விரும்பி எளிமையாக அதிகமாக படிக்க பிரசுரம் செய்கிறது. அதிலேயும் உடனுக்கு உடன் அப்டேட் செய்திகளும் படிக்க முடியும் . பத்திரிக்கை படிப்பில் எனது முதல் சாய்ஸ் என்றால் அது தினமலர் தான் அப்புறம்தான் மற்றவைகள் . தினமலர் பணிகள் மென்மேலும் பல்லாண்டு காலம் வாழ்க வளர்க வாழ்த்துகின்றேன். நல்வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
radhakrishnan - TIRUNELVELI,இந்தியா
06-செப்-202113:40:05 IST Report Abuse
radhakrishnan உங்கள் பணி தொடரட்டும் .. தரமான செய்திகளை கொடுப்பதில் தினமலர் கு நிகர் வேறு யாரும் இல்லை . நான் தினமும் படிப்பது தினமலர் மட்டும் தான். பிற நிறுவன செய்திகளை கண்டால் கோவம் தான் வருகிறது . என் என்றால் அவ்வளவு செய்திகளும் வேண்டாத செய்தி தான் . என்றும் நேர்மை செய்திகளுடன் தினமலர் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X