பொது செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூர் மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

Added : செப் 05, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மீண்டும் துவங்கி உள்ளது. ஒரே மாதத்தில், மூவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தற்போது அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக, இரண்டு ஆண்டுகளாக, திருவள்ளூர்
 திருவள்ளூர் மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

திருவள்ளூர் : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மீண்டும் துவங்கி உள்ளது.

ஒரே மாதத்தில், மூவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தற்போது அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக, இரண்டு ஆண்டுகளாக, திருவள்ளூர் மருத்துவமனையில், பெரிய அளவிலான அறுவை சிகிச்சை நடைபெறவில்லை.மீண்டும் துவக்கம்மருத்துவக் கல்லுாரியாக தரம் உயர்த்தப்பட்டதால், தற்போது, அனைத்து விதமான சிக்கலான அறுவை சிகிச்சையை, மருத்துவர்கள் திறம்பட செய்து வருகின்றனர்.அந்த வகையில், கொரோனா தொற்றால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, எலும்பியல் துறை மூலம் பல்வேறு அறுவை சிகிச்சை துவங்கியுள்ளது.ஒரே மாதத்தில் மட்டும், மூன்று பேருக்கு, எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, நோயாளிகள் மூவரும், நலமாக உள்ளனர்.

இது குறித்து, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, முதல்வர் மருத்துவர் அரசி கூறுகையில், 'திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், இடுப்பு எலும்பு பாதிக்கப்பட்டுவந்த, 57 - 58 வயதுடைய மூன்று பேருக்கு, இங்கேயே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, நலமாக உள்ளனர்', என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X