பொது செய்தி

தமிழ்நாடு

மலை ரயிலுக்கு மீண்டும் நீராவி இன்ஜின்

Added : செப் 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:நீலகிரி மலை ரயிலுக்கு, மீண்டும் நீராவி இன்ஜின் பொருத்தப்பட உள்ளது. இதற்காக, உள்நாட்டு தயாரிப்பில் உருவான இன்ஜின், திருச்சியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு கொண்டு வரப்பட்டது.மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் ஊட்டி மலை ரயில் இயக்கப்பட்டது. முதலில் நிலக்கரியைப் பயன்படுத்தி, நீராவி இஞ்சின் வாயிலாக, இயக்கப்பட்டது.நிலக்கரி பற்றாக்குறை
 மலை ரயிலுக்கு மீண்டும் நீராவி இன்ஜின்

மேட்டுப்பாளையம்:நீலகிரி மலை ரயிலுக்கு, மீண்டும் நீராவி இன்ஜின் பொருத்தப்பட உள்ளது. இதற்காக, உள்நாட்டு தயாரிப்பில் உருவான இன்ஜின், திருச்சியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு கொண்டு வரப்பட்டது.மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் ஊட்டி மலை ரயில் இயக்கப்பட்டது. முதலில் நிலக்கரியைப் பயன்படுத்தி, நீராவி இஞ்சின் வாயிலாக, இயக்கப்பட்டது.நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, அனைத்து இன்ஜின்களும் நிலக்கரிக்கு பதிலாக, பர்னஸ் ஆயிலை எரிபொருளாக பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டன. நீலகிரி மலை ரயிலுக்கு, யுனெஸ்கோ அந்தஸ்து கிடைத்ததை அடுத்து, இந்த ரயிலில் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விரும்பி பயணித்தனர். இந்நிலையில் பாரம்பரியம் மாறாமல், மீண்டும் நீராவி இன்ஜினை பயன்படுத்த, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக உள்நாட்டிலேயே உள்ள உபகரணங்களைக் கொண்டு, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், 9 கோடி ரூபாய் செலவில், நிலக்கரியில் இயங்கும் நீராவி இன்ஜின் தயாரிக்கப்பட்டது.50 டன் எடைமொத்தம், 50 டன் எடையுடன், 10.8 மீட்டர் நீளத்தில் இந்த இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், 4 டன் நிலக்கரி வைக்கவும், 4,500 லிட்டர் தண்ணீர் நிரப்ப, 'டேங்க்' அமைக்கப்பட்டுள்ளது.திருச்சியிலிருந்து இந்த இன்ஜின், லாரியில், மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனுக்கு, நேற்று கொண்டு வரப்பட்டது. மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்த இன்ஜின், 2 கிரேன்கள் உதவியுடன், தண்டவாளத்தில் இறக்கி வைக்கப்பட்டது.இப்பணியில், தென்னக ரயில்வே துணை இயக்குனர் சதீஷ் சரவணன், கோச் பொறியாளர்கள் சுப்பிரமணி, முகமது அஷ்ரப் மற்றும் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.இந்த இன்ஜின், சோதனை ஓட்டத்துக்குப் பிறகு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
06-செப்-202112:30:34 IST Report Abuse
JeevaKiran நல்ல முயற்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X