ரூ.502 கோடி சந்தன மரங்கள் காப்பீடு செய்ய நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.502 கோடி சந்தன மரங்கள் காப்பீடு செய்ய நடவடிக்கை

Added : செப் 05, 2021
Share
சென்னை-வனத்துறை கிடங்குகளில் உள்ள, 502 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தன மரங்களை காப்பீடு செய்யும் பணியை அதிகாரிகள் துவக்கி உள்ளனர்.தமிழகத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வளரும் சந்தன மரங்கள், கடத்தல் காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. சேலம் உள்ளிட்ட சில கோட்டங்களில், இதற்கான கிடங்குகள் உள்ளன.இந்த கிடங்குகளில்

சென்னை-வனத்துறை கிடங்குகளில் உள்ள, 502 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தன மரங்களை காப்பீடு செய்யும் பணியை அதிகாரிகள் துவக்கி உள்ளனர்

.தமிழகத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வளரும் சந்தன மரங்கள், கடத்தல் காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சந்தன மரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. சேலம் உள்ளிட்ட சில கோட்டங்களில், இதற்கான கிடங்குகள் உள்ளன.இந்த கிடங்குகளில் பாதுகாக்கப்படும் சந்தன மரங்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏலம் விடப்படும்.

அதேநேரத்தில், கிடங்கில் இருப்பு வைக்கப்படும் சந்தன மரங்கள் திருடப்படுவதும், தீ விபத்தில் சேதமடைவதும் உண்டு. இதனால், வனத்துறைக்கு ஏற்படும் வருவாய் இழப்பை தடுக்க, சந்தன மரங்களை காப்பீடு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சேலம் கோட்டத்தில் 502 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தன மரங்களை காப்பீடு செய்வதற்கான நிறுவனத்தை, வனத்துறை தேடி வருகிறது. விரைவில், காப்பீட்டு நிறுவனம் முடிவு செய்யப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X