பொது செய்தி

தமிழ்நாடு

'துாய்மை உறுதிமொழி எடுத்த மாணவிகள்'

Added : செப் 05, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:'துாய்மையைக் கடைப்பிடிப்போம்' என, சின்னதடாகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில், சின்னதடாகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர், துாய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.'நான், துாய்மை பழக்கங்களை தொடர்ந்து, கடைப்பிடிப்பதன் வாயிலாக, உடல் நலத்தை பேணுவேன். பள்ளி,
 'துாய்மை உறுதிமொழி எடுத்த மாணவிகள்'

பெ.நா.பாளையம்:'துாய்மையைக் கடைப்பிடிப்போம்' என, சின்னதடாகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் சார்பில், சின்னதடாகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர், துாய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.'நான், துாய்மை பழக்கங்களை தொடர்ந்து, கடைப்பிடிப்பதன் வாயிலாக, உடல் நலத்தை பேணுவேன். பள்ளி, வீடு, குடியிருப்பு, பொது இடங்களான விளையாடும் இடம், பூங்கா, தோட்டம், கிராமம் மற்றும் மாநிலம் ஆகியவற்றின் உள்ளும், புறமும் சுத்தமாக வைத்துக் கொள்வேன். குப்பையை, குப்பைத் தொட்டியில் மட்டுமே போடுவேன். நிலம், நீர் மற்றும் காற்று ஆகியவற்றை சுத்தமாக வைத்திருப்பேன்.சிறுநீர், மலம் கழிக்க, கழிவறையை மட்டுமே பயன்படுத்துவேன். பயன்பாட்டிற்கு பின்னர், அதை சுத்தமாக பராமரிப்பேன்.கழிவறையைப் பயன்படுத்திய பின்னரும், சாப்பிடும் முன்னரும், சோப்பு கொண்டு, கைகளைக் கழுவுவேன்.என் குடும்பத்தினர், நண்பர்களை, எப்போதும் கழிவறையை பயன்படுத்துதல் மற்றும் சோப்பு கொண்டு கை கழுவும் பழக்கத்தை ஊக்குவிப்பேன்.மகாத்மா காந்தி கனவான 'துாய்மை பாரதம்' என்பதற்கு இதயபூர்வமாக என்னை அர்ப்பணித்து, எனது செயல்பாடுகள் வாயிலாக, அதை நிறைவேற்ற, அயராது பாடுபடுவேன்' எனக்கூறி, மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X