பொது செய்தி

தமிழ்நாடு

இடையூறாக நிற்கும் வாகனங்கள் 'சிப்காட்' சாலைகளில் நெரிசல்

Added : செப் 05, 2021
Share
Advertisement
கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி சிப்காட் சாலைகள் ஓரம், தொழிற்சாலைகளுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், மொத்தம், 22 கிலோ மீட்டர் சாலைகள் உள்ளன. தொழிற்சாலைகளுக்கு வரும் வாகனங்கள், சிப்காட் சாலைகள் ஓரம் நிறுத்துப்படுகிறது.அதனால், அந்த சாலைகளில் பிற வாகனங்களின் போக்குவரத்து
 இடையூறாக நிற்கும் வாகனங்கள் 'சிப்காட்' சாலைகளில் நெரிசல்

கும்மிடிப்பூண்டி : கும்மிடிப்பூண்டி சிப்காட் சாலைகள் ஓரம், தொழிற்சாலைகளுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், மொத்தம், 22 கிலோ மீட்டர் சாலைகள் உள்ளன.

தொழிற்சாலைகளுக்கு வரும் வாகனங்கள், சிப்காட் சாலைகள் ஓரம் நிறுத்துப்படுகிறது.அதனால், அந்த சாலைகளில் பிற வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சிப்காட் ரோந்து படையினர், சாலையோரம் வாகனங்கள் நிறுத்தாமல் கண்காணிக்க வேண்டும்.

அவர்கள், முறையாக கண்காணிப்பு பணிகளை, மேற்கொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட சிப்காட் நிர்வாக அலுவலகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து, சிப்காட் சாலைகளில் வாகனங்கள் நிறுத்தாதபடி கண்காணித்து தடையற்ற போக்குவரத்துக்கு வழி வகை செய்ய வேண்டும் என, தொழிற்சாலை நிர்வாகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X