கழிப்பிடங்களால் சுகாதார சீர்கேடு :பராமரிப்பில்லாத கழிப்பிடங்களால் சுகாதார சீர்கேடு

Added : செப் 05, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே பன்னிமடையில்,பராமரிப்பு இல்லாத பொது கழிப்பிடங்களால், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன.பெ.நா.பாளையம் ஒன்றியம், பன்னிமடை ஊராட்சியில், உலகளந்த பெருமாள் கோவில் அருகே கணேஷ் நகர் உள்ளது.இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்காக கவுண்டம்பாளையம் தொகுதி மேம்பாட்டு நிதியில், 4 லட்சம் ரூபாய் செலவில், ஆண்கள், பெண்களுக்கு,
 கழிப்பிடங்களால் சுகாதார சீர்கேடு :பராமரிப்பில்லாத கழிப்பிடங்களால் சுகாதார சீர்கேடு

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே பன்னிமடையில்,பராமரிப்பு இல்லாத பொது கழிப்பிடங்களால், சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன.பெ.நா.பாளையம் ஒன்றியம், பன்னிமடை ஊராட்சியில், உலகளந்த பெருமாள் கோவில் அருகே கணேஷ் நகர் உள்ளது.இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்காக கவுண்டம்பாளையம் தொகுதி மேம்பாட்டு நிதியில், 4 லட்சம் ரூபாய் செலவில், ஆண்கள், பெண்களுக்கு, தனித்தனியாக இரு கழிப்பிடங்கள், நான்கு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டன.போதிய பராமரிப்பு இல்லாததால், இவை, தற்போது பயன்படுத்துவதற்கு தகுதி இல்லாமல், புதர் மண்டி கிடக்கின்றன. கழிப்பிடங்களுக்கு முன்னால் குப்பை கொட்டப்படுவதால், கழிப்பிடத்துக்குள் செல்ல முடியவில்லை.மின் இணைப்பு வழங்கப்படாததால், இரவு நேரங்களில் இருள் மண்டிக் கிடக்கின்றன. கதவுகளும் உடைந்து விட்டன.தண்ணீர் இணைப்பும் முறையாக வழங்கப்படவில்லை. பயன்படுத்துவதற்கு தகுதியற்ற நிலையில் காணப்படுவதால், பொதுமக்கள் இக்கழிப்பிடத்தை பயன்படுத்துவது இல்லை.இதனால், இப்பகுதி மக்கள், கணுவாய், தடாகம் செல்லும் சாலைகளின் ஓரத்தை, திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது.இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம், கழிப்பிடங்களை புனரமைத்து, பயன்பாட்டுக்குத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X