பொது செய்தி

தமிழ்நாடு

நல்லாசிரியர் விருது வழங்கும் விழா

Added : செப் 05, 2021
Share
Advertisement
விழுப்புரம் : ஆசிரியர் தினத்தையொட்டி, பள்ளிக்கல்வித் துறை சார்பில் 9 ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருது வழங்கும் விழா விழுப்புரத்தில் நடந்தது.கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் மோகன், ரவிக்குமார் எம்.பி., தலைமை தாங்கினர்.விழாவில், ஆசிரியர்கள் கெடார் பெருமாள், கண்டாச்சிபுரம் குரு, மழவந்தாங்கல் நடராஜன், அனந்தபுரம் முருகன், திருவெண்ணெய்நல்லுார்

விழுப்புரம் : ஆசிரியர் தினத்தையொட்டி, பள்ளிக்கல்வித் துறை சார்பில் 9 ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருது வழங்கும் விழா விழுப்புரத்தில் நடந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் மோகன், ரவிக்குமார் எம்.பி., தலைமை தாங்கினர்.விழாவில், ஆசிரியர்கள் கெடார் பெருமாள், கண்டாச்சிபுரம் குரு, மழவந்தாங்கல் நடராஜன், அனந்தபுரம் முருகன், திருவெண்ணெய்நல்லுார் சிவபாலன், வாணியம்பாளையம் சரசு, ஆனாங்கூர் மாலினிதேவி, கிளியனுார் லட்சுமி ரேகா, செஞ்சி அப்ரோஸ்கான் ஆகிய 9 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கி கலெக்டர் பேசுகையில், 'கல்வியில் பின் தங்கிய மாவட்டம் என்ற அடைமொழியை நீக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.புதிய யுக்திகளைப் பயன்படுத்தி மாணவர்களின் திறமையை மேம்படுத்தி, அதன் மூலம் அவர்களை வெற்றியாளர்களாக சமூகத்திற்கு வழங்க பாடுபடுவோம்' என்றார்.

பின், பள்ளிக்கல்வித் துறை சார்பில் கொரோனா நிவாரண நிதி, தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 2 லட்சத்து 5 ஆயிரத்து 200 ரூபாய்க்கான காசோலையை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா கலெக்டரிடம் வழங்கினார்.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர் சங்கர், துணை கலெக்டர் (பயிற்சி) ரூபினா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X