பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி முகாம்: தன்னார்வலர்கள் உதவி

Added : செப் 05, 2021
Share
Advertisement
கோவை, புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில், கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்தன.துடியலுார்குருடாம்பாளையம் ஊராட்சியில், வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி, ராமகிருஷ்ணா மருத்துவமனை, ரோட்டரி கிளப் சாய் சிட்டி மற்றும் குருடம்பாளையம் ஊராட்சி ஆகியவை சார்பில், கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.இம்முகாமில், 500 பேருக்கு

கோவை, புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில், கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்தன.துடியலுார்குருடாம்பாளையம் ஊராட்சியில், வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் சார்பில், ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி, ராமகிருஷ்ணா மருத்துவமனை, ரோட்டரி கிளப் சாய் சிட்டி மற்றும் குருடம்பாளையம் ஊராட்சி ஆகியவை சார்பில், கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.இம்முகாமில், 500 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என, ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள், அறிவுறுத்தினர்.நிகழ்ச்சியில், குருடம்பாளையம் ஊராட்சி தலைவர் ரவி, ராமகிருஷ்ணா இன்ஜினீயரிங் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கேசவன்சாமி, நாகராஜ் பாண்டியன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.சூலுார் -சுகாதாரத்துறையுடன் இணைந்து சோமனூர் ரோட்டரி சங்கம் சார்பில், கரவளி மாதப்பூர் ஊராட்சியில் மன்ற அலுவலக வளாகத்தில் நேற்று தடுப்பூசி முகாம் நடந்தது.இதில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், விசைத்தறி தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.ரோட்டரி சங்க நிர்வாகி ராமமூர்த்தி கூறுகையில்,"அடித்தட்டு மக்கள் வரை அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி, தன்னார்வலர்களுடன் இணைந்து, முகாம்களை நடத்துகிறோம்," என்றார். -நமது நிருபர் குழு-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X