பூண்டிக்கு இனிப்பு; பழங்கரைக்கு கசப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பூண்டிக்கு 'இனிப்பு'; பழங்கரைக்கு 'கசப்பு'

Added : செப் 06, 2021
Share
அவிநாசி;கருத்துக்கேட்பு கூட்டத்தில், திருமுருகன்பூண்டியை நகராட்சியாக்க வரவேற்பு தெரிவிக்கப்பட்ட அதேசமயம், பழங்கரை ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், அவிநாசியை, நகராட்சியாக்க வேண்டும் என்ற கருத்து, பலதரப்பினராலும், முன்வைக்கப்பட்டது.திருமுருகன்பூண்டி பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்துதல், பழங்கரை ஊராட்சியை அதனுடன்
 பூண்டிக்கு 'இனிப்பு'; பழங்கரைக்கு 'கசப்பு'

அவிநாசி;கருத்துக்கேட்பு கூட்டத்தில், திருமுருகன்பூண்டியை நகராட்சியாக்க வரவேற்பு தெரிவிக்கப்பட்ட அதேசமயம், பழங்கரை ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், அவிநாசியை, நகராட்சியாக்க வேண்டும் என்ற கருத்து, பலதரப்பினராலும், முன்வைக்கப்பட்டது.திருமுருகன்பூண்டி பேரூராட்சியை, நகராட்சியாக தரம் உயர்த்துதல், பழங்கரை ஊராட்சியை அதனுடன் இணைத்தல் தொடர்பான விளக்கம் மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம், அவிநாசியில் நேற்று நடந்தது.நகராட்சி நிர்வாக மண் டல செயற்பொறியாளர் முருகேசன் வரவேற்றார். கலெக்டர் வினீத் பேசினார். கூட்டத்தில், அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப் பினர் தெரிவித்த கருத்துகள்:காங்கயம் நகராட்சி கமிஷனர் முத்துக்குமார்:நகராட்சி அமைப்பில் நகரமைப்பு பிரிவு, வருவாய், சுகாதாரம், பொறியியல் பிரிவு என, பல பிரிவுகள் இருக்கும். சாலை, குடிநீர், துாய்மைப்பணி உள்ளிட்ட அடிப்படை வசதி உடனுக்குடன் செய்து கொடுக்கப்படும்.இந்திய கம்யூ., மாவட்ட செயலர் ரவி:அவிநாசியையும் நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். பழங்கரை ஊராட்சியை இரண்டாக பிரித்து, ஒரு பகுதியை அவிநாசியுடனும், மற்றொரு பகுதியை, பூண்டியுடனும் இணைக்க வேண்டும்.பழங்கரை ஊராட்சி உறுப்பினர் சண்முகம்:பழங்கரையை, நகராட்சியுடன் இணைக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது; மக்களின் தண்ணீர் தேவை மேம்படும்.சமூக ஆர்வலர்திருநாவுக்கரசு:பழங்கரை ஊராட்சி பெரியாயிபாளையத்தை, தனி ஊராட்சியாக அறி விக்க வேண்டும்.அவிநாசி ஒன்றியக்குழு உறுப்பினர் கார்த்திகேயன்:பழங்கரை ஊராட்சியில், நுாறு நாள் திட்டத்தை நம்பி, பல குடும்பங்கள் உள்ளன. பல்வேறு அரசு அலுவலகங்களும், அவிநாசியில் தான் உள்ளது. பழங்கரை ஊராட்சியை இரண்டாக பிரிக்கலாம். பூண்டி நகராட்சியுடன் இணைத்தால், போராட்டம் நடத்துவோம்.பல்வேறு தரப்பினரும் பழங்கரை ஊராட்சியை, திருமுருகன்பூண்டி நக ராட்சியுடன் இணைக்க எதிர்ப்பும், அவிநாசி பேரூ ராட்சியையும் நகராட்சியாக தரம் உயர்த்தி, அதனுடன் பழங்கரை ஊராட்சியை இணைக்க வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தனர்.பழங்கரை நுாறு நாள் திட்ட தொழிலாளர்கள், இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பதாகை ஏந்திய படி, கூட்ட அரங்கிற்கு ஊர்வலமாக வந்தனர்.அவிநாசி தாசில்தார் ராகவி, திருமுருகன்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், அவி நாசி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜெகதீசன், துணை தலைவர் பிரசாத் குமார், பழங்கரை ஊராட்சி தலைவர் கோமதி உள் ளிட்ட பலர் பங்கேற்றனர். அவிநாசி பி.டி.ஓ., மகேஸ்வரி நன்றி கூறினார்.அச்சம் வேண்டாம் என்கிறார் கலெக்டர்கலெக்டர் வினீத் பேசுகையில், ''திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு கிடைக்கும் பலன்கள் அனைத்தும் பழங்கரை ஊராட்சிக்கும் கிடைக்கும். இலவச வீட்டு மனைப்பட்டா, நுாறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டம் போன்றவை ரத்தாகும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. இவை, நகர்ப்புறங்களுக்கு ஏற்ப, வேறு பெயரில் நடைமுறைக்கு வரும்'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X