பொது செய்தி

தமிழ்நாடு

கொல்லிமலையில் சூழல் சுற்றுலா

Added : செப் 06, 2021
Share
Advertisement
நாமக்கல்-''கொல்லிமலையில், 13 ஏக்கரில் சூழல் சுற்றுலா ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார். அவர், நாமக்கல்லில் நேற்று கூறியதாவது:சுற்றுலா துறை மானிய கோரிக்கை மீது 30 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை பெரிய சுற்றுலா தலங்களுக்கு இணையாக தரம் உயர்த்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

நாமக்கல்-''கொல்லிமலையில், 13 ஏக்கரில் சூழல் சுற்றுலா ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என, சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.

அவர், நாமக்கல்லில் நேற்று கூறியதாவது:சுற்றுலா துறை மானிய கோரிக்கை மீது 30 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையை பெரிய சுற்றுலா தலங்களுக்கு இணையாக தரம் உயர்த்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு லேசர் ஒளி, பூம்புகார் மேம்பாடு, முட்டுக்காடு- பகுதியில் படகு சவாரி, நீர் விளையாட்டு, மெரினா கடற்கரையில் படகு சவாரி போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.தமிழ்நாடு ஓட்டல்கள் மறுசீரமைக்கப்பட்டு மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

300 சுற்றுலா தலங்களை மேம்படுத்த பெருந்திட்டம் தயாரித்து வருகிறோம். 10 ஆண்டுகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்பட்டு அழகூட்டப்படும். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், 13 ஏக்கர் நிலப்பரப்பில் சூழல் சுற்றுலா ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஓட்டல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல் மாவட்டம் நைனாமலை வரதராஜ பெருமாள் மலைக்கோவிலில் சாலை அமைக்க, கூடுதல் நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X